Last Updated : 04 Jul, 2016 10:21 AM

 

Published : 04 Jul 2016 10:21 AM
Last Updated : 04 Jul 2016 10:21 AM

போதைக்கு அடிமையானவர்கள் குறித்த ஆய்வு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்துகிறது

தேசிய மற்றும் மாநில அளவில் எத்தனை பேர் போதைப் பொருட் களுக்கு அடிமையாகி மீள முடியா மல் தவிக்கின்றனர் என்ற ஆய்வு நடத்தப்படவுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மற்றும் தேசிய போதை மீட்பு சிகிச்சை மையத் துடன் இணைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இந்த ஆய்வை நடத்தவுள்ளது. கடைசி யாக 2001-ல் இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டு, அதன் புள்ளிவிவரங்கள் 2004-ல் வெளியிடப்பட்டன.

தற்போது புதிதாக தொடங்கப் படவுள்ள இந்த ஆய்வு 2 ஆண்டு கள் வரை நடக்கும் என்றும் இதற் காக ரூ.22.41 கோடி ஒதுக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘ஐ.நா மற்றும் உலக சுகா தார அமைப்பு போன்ற சர்வதேச முகமைகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பில் இந்தியா உள்ளது.

இதற்காகவே போதைப் பொருட் களுக்கு அடிமையானவர்கள் குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் மாநில அளவில் ஆய்வுகள் நடத்தப்பட வில்லை. இதனால் துல்லியமான முடிவுகள் நமக்கு கிடைக்க வில்லை. மேலும் பெண்களில் எத்தனை பேர் போதைப் பொருட் களால் பாதிக்கப்பட்டனர் என்ற தகவலும் அதில் இல்லை’’ என்றார்.

மது, புகை, புகையிலை பொருட் கள், போதை தரும் மாத்திரைகள் இல்லாமல் எத்தனை பேரால் இயல்பு வாழ்க்கை நடத்த முடியும் என வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படவுள்ளது. குறிப்பாக வீடு இல்லாதவர்கள், கைதிகள், திருநங்கைகள், பாலியல் தொழி லாளிகள், போக்குவரத்து ஊழியர் கள் (லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள்) ஆகியோரிடம் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x