Last Updated : 13 Jun, 2017 09:31 AM

 

Published : 13 Jun 2017 09:31 AM
Last Updated : 13 Jun 2017 09:31 AM

மீண்டும் வெளிவந்தது ‘நேஷனல் ஹெரால்டு’: மோடி அரசு ஊடகங்களை நசுக்கப் பார்க்கிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்த்து போராடுபவர்களை நசுக்கப் பார்க்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப் பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் மறு வெளியீட்டு விழா பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற‌ குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மலரை வெளியிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

70 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப் பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிக்கை பல தடைகளை மீறி மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பத்திரிகை மூலம் உண்மையை அழிக்க நினைப்பவர்களை மக்கள் முன் தோலுரித்து காட்ட வேண்டும். காங்கிரஸ் தவறு செய்தாலும் அஞ்சாமல் விமர்சிக்க வேண்டும்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு உண்மையை மறைப்பதோடு அதை அழிக்கவும் பார்க்கிறது. உண்மைகளை அம்பலப்படுத்த துணியும் பத்திரிகையாளர்களை யும், அரசியல் விமர்சகர்களையும், அரசுக்கு எதிராக பேசுபவர்களையும் அச்சுறுத்துகிறது. உண்மை ஒருநாள் இந்த அரசை கீழே தள்ளிவிடும். நாட்டில் ஊடக சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டது. இதனால் சமூகத்திலும் கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

வழிநடத்தும் ஆர்எஸ்எஸ்

மோடி தலைமையிலான பாஜக அரசை ஆர்எஸ்எஸ் வழி நடத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். சிறுபான்மையினர் மிரட்டப்படு கிறார்கள். ஒற்றுமையுடன் வாழ்ந்த மக்களிடையே கோபத்தையும், வெறுப்பையும் விதைக்கிறது. வெறுப்பை விதைக்கும் மோடி அரசு, அதற்கான பலனை நிச்சயம் அனுபவிக்கும்.

நாட்டில் வேலையில்லா திண் டாட்டம் தலை விரித்தாடுகிறது. இளைஞர்களும், பெண்களும் உரிய வேலை கிடைக்காமல் வறு மையில் வாடுகின்றனர். பொருளா தாரம் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காணாமல் புதிய பிரச்சினை களை மோடி அரசு உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

இவ்வாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் ஊடக சுதந்திரம் தொடர்பாக உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x