Last Updated : 02 Aug, 2016 10:08 AM

 

Published : 02 Aug 2016 10:08 AM
Last Updated : 02 Aug 2016 10:08 AM

அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

அசாம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.7 என பதிவான இந்த நிலநடுக்கம், நேற்று பிற்பகல் 3.31 மணிக்கு அசாம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உணரப்பட்டது.

மியான்மர் பகுதியை மையமாகக் கொண்டு, 120 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் உயிருக்கோ, உடைமைகளுக்கோ சேதாரம் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x