Last Updated : 27 Sep, 2016 10:45 AM

 

Published : 27 Sep 2016 10:45 AM
Last Updated : 27 Sep 2016 10:45 AM

சுனந்தா மரணத்தில் நீடிக்கும் மர்மம்: சசிதரூரின் கைபேசியில் அழிக்கப்பட்ட பதிவுகளை ஆராய போலீஸார் முடிவு - அனுமதி கோரி கனடா நீதித்துறைக்கு கடிதம்

முன்னாள் அமைச்சர் சசி தரூர் மற்றும் மர்மமான முறையில் இறந்த அவரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கைபேசிகளில் அழிக்கப் பட்ட குறுந்தகவல் மற்றும் உரையாடல் பதிவுகளைப் பெறும் முயற்சியில் டெல்லி காவல்துறை யினர் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச் சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூரின் 3-வது மனைவி சுனந்தா புஷ்கர் (51) 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இரவு, டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

சசி தரூருடன் நெருக்கமாக பழகி வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் மெஹர் தராருடன் ட்விட்டர் மூலம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த மறுநாள் சுனந்தா இறந்தார்.

சுனந்தாவின் குடல் பாகத்தை ஆய்வு செய்த எய்ம்ஸ் மருத் துவர்கள், அதில் விஷம் கலந்திருந்ததாகக் கூறினர். வாஷிங்டன் ஆய்வகம் நடத்திய சோதனையில் அபாயகரமான வேதிப்பொருள் (பொலோனியம்) காரணமாக சுனந்தா இறந்ததாக தெரிவித்தது.

எனினும் சுனந்தாவின் இறப்புக் கான காரணம் இன்னும் உறுதிப் படுத்தப்படாத நிலையில், இதனைக் கொலை வழக்காக பதிவு செய்த டெல்லி போலீஸார் சசி தரூர், தரார் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். வீட்டுப் பணியாள் நாராயண் சிங், ஓட்டுநர் பஜ்ரங்கி, நண்பர் சஞ்சய் தேவன் உள்ளிட்டோரிடம் உண்மை கண்டறியும் சோதனை யும் நடத்தப்பட்டது.

இதற்கிடையே, சசி தரூர் மற்றும் மெஹர் தரார் இடையே பரிமாறப்பட்ட ஏராளமான குறுந் தகவல்கள் மற்றும் உரையாடல் பதிவுகள் சசி தரூரின் கைபேசியில் இருந்து அழிக்கப்பட்டதாக இறப்பதற்கு முன் சுனந்தா தன்னிடம் கூறியதாக, பாகிஸ் தானைச் சேர்ந்த நளினி சிங் என்ற பத்திரிகையாளர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

அழிக்கப்பட்ட பதிவுகளை ஆராய்ந்தால் இவ்வழக்கில் புதிய திருப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இருவரின் ‘பிளாக்பெர்ரி’ கைபேசியில் அழிக்கப்பட்ட பதிவு களின் விவரங்களைக் கனடா வில் உள்ள ‘ரிசர்ச் இன் மோஷன்’ நிறுவனத்திடம் இருந்து பெறு வதற்கு, அந்நாட்டு நீதித்துறை யிடம் டெல்லி போலீஸார் முறைப்படி அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x