Last Updated : 19 Apr, 2017 11:01 AM

 

Published : 19 Apr 2017 11:01 AM
Last Updated : 19 Apr 2017 11:01 AM

நாகா குழுக்களுடன் மேலும் ஓராண்டுக்கு சண்டை நிறுத்தம்

நாகாலாந்தில் இரு தீவிரவாத குழுக்களுடன் செய்துகொள்ளப் பட்ட சண்டை நிறுத்த உடன் பாட்டை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீ்ட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நேற்று வெளியிட்ட அறிக்கையில், “என்எஸ்சிஎன்-ஆர், என்எஸ்சி என்-என்.கே. ஆகிய அமைப்பு களுடன் செய்துகொள்ளப்பட்ட சண்டை நிறுத்த உடன்பாட்டை ஏப்ரல் 28 முதல் மேலும் ஓராண் டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் சத்யேந்திர கார்க் கையெழுத்திட்டார். என்எஸ்சிஎன்-ஆர் சார்பில் டோஷிலாங்குமரும், என்எஸ்சிஎன்-என்.கே சார்பில் ஜாக் ஜிமோமியும் கையெழுத் திட்டனர்.

இந்த இரு குழுக்கள் தவிர நாகாலாந்தில் என்எஸ்சின் (இசாக்-முய்வா), என்எஸ்சிஎன் (கப்லாங்) போன்ற குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x