Last Updated : 11 Jun, 2017 11:28 AM

 

Published : 11 Jun 2017 11:28 AM
Last Updated : 11 Jun 2017 11:28 AM

சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் செய்து காஷ்மீர் இளைஞர்களை தூண்டுகின்றனர்: ராணுவத் தளபதி பிபின் ராவத் கவலை

சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப் படும் பொய் பிரச்சாரத்தில் ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் தூண்டப்படு கின்றனர் என ராணுவத் தளபதி பிபின் ராவத் கவலை தெரிவித்தார்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கழகத்தில் (ஐஎம்ஏ) 490 பேர் நேற்று பயிற்சியை நிறைவு செய்தனர். இவர் களின் வண்ணமிகு அணிவகுப்பு மற்றும் சாகசங்கள் கொண்ட பயிற்சி நிறைவு விழா அங்கு நடைபெற்றது. இதில் ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்றார்.

பயிற்சி நிறைவு செய்தவர்கள் மத்தியில் பிபின் ராவத் பேசும்போது, “நாட்டின் மிகப்பெரிய சவாலாக தீவிர வாதம் உள்ளது. இதை நாம் துணிவுடன் எதிர்த்துப் போரிட வேண்டும். இங்கு சர்வதேச தரத்துக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இங்கு பயின்ற ராணுவத் திறன்களை நீங்கள் நாட்டுக்காக பயன் படுத்துவதற்கான நேரம் இதுவாகும்.

ஜம்மு காஷ்மீரில் அமைதிக்கு எதிரான சக்திகள் இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றன. சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரத்தில் காஷ்மீரில் இளைஞர்கள் தூண்டப்படுகின் றனர். இதை தடுக்கும் வழிகளை பாது காப்பு படைகள் காணவேண்டும்”என்றார்.

பின்னர் பிபின் ராவத் கூறும்போது, “தீவிரவாதிகள் பெண்களை அடிக்கடி மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வருகின் றனர். எனவே ராணுவத்தில் போரிடும் பணியிலும் பெண்கள் சேர்க்கப்படுவது அவசியமாகும்” என்றார்.

டேராடூனில் உள்ள ஐஎம்ஏ-வில்தான் பிபின் ராவத் பயிற்சி பெற்றார். நேற்று இங்கு பயிற்சி நிறைவு செய்த 490 பேரில் நட்பு நட்பு நாடுகளைச் சேர்ந்த 67 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

மற்றவர்களில் அதிகபட்சமாக 74 பேர் உ.பி.யை சேர்ந்தவர்கள். இதைத் தொடர்ந்து ஹரியாணா (49), உத்தராகண்ட் (40), ராஜஸ்தான் (30), பிஹார் (28), டெல்லி (23) ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தீவிரவாதி சுட்டுக்கொலை

இதற்கிடையில் வடக்கு காஷ்மீர், பண்டிப்போரா மாவட்டத்தில், எல்லையில் ஊடுருவல் முயற்சியை ராணுவம் நேற்று முறியடித்தது. அப்போது தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

- பிபின் ராவத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x