Last Updated : 12 Jul, 2016 07:43 AM

 

Published : 12 Jul 2016 07:43 AM
Last Updated : 12 Jul 2016 07:43 AM

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மும்பை ஐஐடி மாணவர்களுக்கு 3,500 காதி அங்கவஸ்திரம்

காதி துணிகளை மக்களிடம் பிரபலப்படுத்த பல்வேறு திட்டங் களை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. குஜராத் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவின் போது, மாணவர் களுக்கு காதி அங்கி வழங்கப் பட்டது. அதை அணிந்து கொண்டு மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

இப்போது மும்பை ஐஐடி மாணவர்களின் பட்டமளிப்பு விழா வுக்காக 3,500 அங்கவஸ் திரங்கள் ‘ஆர்டர்’ கொடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை ஐஐடி இயக்குநர் தேவாங் காக்கர் நேற்று கூறும்போது, ‘‘காதி அங்க வஸ்திரம் அணிவதன் மூலம் மாணவர்கள் மனதில் தேசப்பற்று பதியும். அதற்காக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர் களுக்காக காதி அங்கவஸ்திரம் தயாரித்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x