Last Updated : 18 Jun, 2016 08:55 AM

 

Published : 18 Jun 2016 08:55 AM
Last Updated : 18 Jun 2016 08:55 AM

ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள்: வரும் 22-ல் ஏவுகிறது ‘இஸ்ரோ’

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் வரும் 22-ம் தேதி ஒரே சமயத்தில், 20 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் கிரண் குமார் பெங்களூருவில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள விண்வெளி ஏவுதளத் தில் வரும் 22-ம் தேதி ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இருக்கிறோம். இந்த செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் ஏந்தி செல்கிறது. அதே நாளில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்தியாவின் 2 செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. செயற்கைக் கோள் ஏவுவதற்கு ஒப்புதல் அளிக்கும் ஆணையம் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானிகளின் குழு ஆகியவற்றின் கூட்டம் இன்னும் சில தினங்களில் கூடுகிறது. அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

கடந்த 2008-ம் ஆண்டு அதிகபட்சமாக‌ ஒரே தடவையில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருந்தோம். தற்போது 20 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்துவதன் மூலம் இஸ்ரோ புதிய சாதனையை படைக்க இருக்கிறது. இந்த 20 செயற்கைக்கோள்களில், இந்திய பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3 செயற்கைக்கோள்களும், அமெரிக்கா, கனடா, இந்தோனே சியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செயற்கைக் கோள்களும் அடங்கும். இந்த 20 செயற்கைக் கோள்கள் மற்றும் பிஸ்எல்வி சி34 ராக்கெட் ஆகியவற்றின் மொத்த‌ எடை 1288 கிலோ ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x