Last Updated : 12 Sep, 2016 10:31 AM

 

Published : 12 Sep 2016 10:31 AM
Last Updated : 12 Sep 2016 10:31 AM

மத்திய அரசு நிதியை செலவிட மாநிலத்துக்கு கூடுதல் சுதந்திரம்

மத்திய அரசு திட்டங்களுக்கான (சிஎஸ்எஸ்) நிதியை மாநில அரசுகள் செலவிடுவதற்கு கூடுதல் சுதந்திரம் வழங்க வகை செய்யும் புதிய விதிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நெகிழ்-நிதி எனப்படும் அந்த புதிய விதிமுறைகளின்படி, ஒவ் வொரு மத்திய அரசு திட்டத்துக் கும் மாநிலங்களுக்கு வழங்கப் படும் நிதி 10-லிருந்து 25 சதவீத மாகவும் யூனியன் பிரதேசங் களுக்கு 30 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா வது: புதிய விதிமுறைகளின்படி, மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக, இயற்கைப் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணப் பணிகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

லோகோ கட்டாயம்

அதேநேரம், குறிப்பிட்ட மத்திய அரசு திட்டத்தின் பெயர், சுருக்க பெயர் மற்றும் சின்னம் (லோகோ) ஆகியவற்றைப் பயன் படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய வில்லை என்றால், மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படமாட்டாது. எனினும், இந்த புதிய விதிமுறை களைப் பயன்படுத்திக் கொள்ள, மாநில அரசுகள் மாநில அளவி லான ஒதுக்கீட்டுக் குழுவை (எஸ்எல்எஸ்சி) அமைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற சட்ட அங்கீகாரம் பெற்ற திட்டங்களுக்கு இந்த வசதி பொருந்தாது. இவ் வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x