Published : 06 Jan 2017 08:03 AM
Last Updated : 06 Jan 2017 08:03 AM

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழப்பு ஏன்? - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்தது குறித்து 6 வாரங்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிய தாலும், டெல்டா பாசனத்துக்கான அணைகள் மூடப்பட்டதாலும், திருச்சி, தஞ்சை, நாகை, புதுக் கோட்டை பகுதிகளில் சம்பா சாகுபடியும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி பகுதிகளில் நெல், மஞ்சள், உளுந்து, மக்காச்சோளம் போன்றவற்றின் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதன் விளைவாக தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழப்பதும், சிலர் தற்கொலை செய்துகொள்வதும் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந் தனர். இதுகுறித்து பத்திரிகை களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், ‘தமிழகத்தில் ஒரு மாதத் தில் 106 விவசாயிகள் பலியானது வருத்தத்துடன் கவனம் செலுத்த வேண்டிய விஷயம். ஒரே மாதத் தில், 83 விவசாயிகள் மாரடைப் பால் இறந்ததாக வெளியாகி உள்ள செய்தி கவலை அளிக்கிறது.

இவ்விஷயத்தில் மாநில அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது, இதற்கு மேல் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 6 வாரங் களுக்குள் விரிவான விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

விவசாயத் துறை சட்டங்கள், கொள்கைகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். அரசுத் துறைகளின் திட்டங்கள் செயலாக்கத்தில் போதிய திறமையின்மை, தோல்வி போன்றவையும் விவசாயிகளின் உயிரிழப்புக்கு காரணமாகும்

பயிர் கருகி விளைச்சல் பாதிப்பது அந்த விவசாயியை பொருளாதார ரீதியாக மட்டும் பாதிப்பதில்லை. கடுமையான மன அழுத்தத்தையும், மன வேத னையையும் ஏற்படுத்திவிடும். இதனால் விவசாயி இயற்கையாக இறந்தாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ, அந்த குடும்பமே சீர்குலைந்துபோகும்.’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x