Last Updated : 28 Jun, 2019 01:54 PM

 

Published : 28 Jun 2019 01:54 PM
Last Updated : 28 Jun 2019 01:54 PM

வீட்டை விட்டு வெளியேறுங்கள்: சந்திராபாபு நாயுடு தங்கியிருக்கும் வீட்டுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்

அமராவதியில் கிருஷ்ணா நதியின் கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டை காலிசெய்யக்கோரி ஆந்திரமாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த வீடு, அவரின் சொந்த வீடு அல்ல. லிங்கமானேனி ரமேஷ் என்பவுக்கு சொந்தமான அந்த  வீட்டை லீசுக்கு எடுத்து சந்திரபாபு நாயுடு தங்கி இருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிக்கரையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதிய சந்திரபாபு நாயுடு, தனது இல்லத்தையும், பிரஜா வேதிகா இல்லத்தையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், கடந்த விதிமுறைகளை மீறி கிருண்ணா நதிக்கரையின் ஓரத்தில் கட்டப்பட்டு இருந்த சந்திரபாபு நாயுடுவின் பிரஜா வேதிகா இல்லத்தின் பகுதிகளை ஆந்திர அரசு இடித்து தரைமட்டமாக்கியது.

இந்த சந்திரபாபு நாயுடு லீசுக்கு எடுத்து தங்கியுள்ள வீடும்,சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் லிங்கமானேனி ரமேஷ்க்கு நோட்டீஸ் அனுப்பிய தலைநகர் மேம்பாட்டு ஆணையம், வீட்டின் முகப்பில் நோட்டீஸை இன்று ஒட்டிவிட்டுச் சென்றது.

இந்த நோட்டீஸில், " கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் 6 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு முறைப்படி அனுமதி பெறவில்லை. ஒட்டுமொத்தமா விதிமுறைகளை மீறி வீடு கட்டப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கு தேசம் கட்சி மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோல்வி அடைந்தபின், சந்திரபாபு நாயுடுவுக்கு அடிமேல் அடி விழுந்துவருகிறது. சமீபத்தில் மாநிலங்களைவைச் சேர்ந்த எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில்இணைந்தனர். எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவில் இணைந்தனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன் கிருஷ்ணா நதிக்கரையில் ரூ.8 கோடியில் கட்டியிருந்த பிரஜா வேதிகா இல்லத்தை விதிமுறை மீறிகட்டியிருப்பதாக ஆந்திர அரசுஇடித்தது. இப்போது சந்திரபாபு நாயுடு தங்கி இருந்த வீட்டையும் இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x