Last Updated : 12 Sep, 2018 08:26 AM

 

Published : 12 Sep 2018 08:26 AM
Last Updated : 12 Sep 2018 08:26 AM

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி துவங்க அனுமதி கேட்ட மத்திய பிரதேச பல்கலைக்கழகத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மறுப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபா லில் உள்ள ஒரு மருத்துவப் பல் கலைக்கழகம் இந்தி மொழியில் மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ் படிப்பு) கற்பிக்க அனுமதி கேட்டி ருந்தது. இதற்கு இந்திய மருத் துவக் கவுன்சில்(எம்.சி.ஐ) அனுமதி மறுத்துள்ளது.

ம.பி. மாநிலம் போபாலில் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தி பல்கலைக் கழகம் டிசம்பர் 2011-ல் துவங்கி நடைபெற்று வருகிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகமான அதன் சார் பில் இந்தி மொழியில் எம்.பி.பி. எஸ் படிப்பு துவங்க அனுமதி கேட்டு எம்சிஐக்கு விண்ணப்பிக்கப் பட்டது. இதைப் பரிசீலனைக்கு ஏற்ற எம்.சி.ஐ, இதுபற்றி ஆலோசனை செய்ய ஒரு குழு அமைத்தது. இந்த குழு எம்.பி.பி.எஸ்.படிப்பை இந்தியில் கற்பிக்க அனுமதிக்கக் கூடாது என எம்.சி.ஐயிடம் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் எம்.சி.ஐ. வட்டாரம் கூறும்போது, ‘‘இந்தியில் அனுமதி அளித்தால் அதன் அடிப்படையில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பு துவங்க மற்ற மாநிலங்களும் அனுமதி கோரும். ஆங்கிலம் சர்வதேச அளவில் ஏற்கப்படுவதால் அதைத் தவிர வேறு மொழிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று முடிவெ டுக்கப்பட்டது’’ எனத் தெரிவித்தனர்.

நாட்டில் மொத்தம் 450 மருத் துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. இவற்றில் 150 மட்டுமே இந்தி மொழி பேசும் மாநிலங்களில் உள்ளன. மற்ற அனைத்தும் தென் இந்திய மாநிலங்களில் அமைந்துள்ளன. இதில், தமிழகத்தில் மிகவும் அதி கம். எனவே, இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ்.படிப்புக்கு அனுமதி அளித்தால் பிரச்சினை ஏற்படும் என எம்.சி.ஐ கருதுகிறது. இதற்கான தனது பதிலை ம.பி பல்கலை.க்கு எம்.சி.ஐ அனுப்பியுள்ளது.

அதில், ‘‘எம்.பி.பி.எஸ். படிப்பில் அதிகமான பாடங்கள் ஆங்கிலத் தில் மட்டுமே படிக்க முடியும். அறிவியல் ரீதியாகவும், சர்வ தேச தொழிநுட்பத்தையும் மருத் துவக் கல்வி சார்ந்துள்ளது. அவ்வப் போது தேவைக்கு ஏற்றபடி மாற் றம் கண்டு வருகிறது. இதன் வேகத்திற்கு அதன் ஆங்கிலப் பாடங்களை இந்தியில் மொழி பெயர்ப்பு செய்து அளிப்பது கடினம். இந்தியில் கற்கும் இந்திய மருத்து வர்கள் சர்வதேச அளவில் போட்டியிடுவதும், பணி செய் வதும் கடினமாகி விடும்’’ என எம்.சி.ஐ குறிப்பிட்டுள்ளது.

ஆசிய நாடுகளும் நம் அண்டை நாடுகளும் ஆங்கிலத்தில் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பை போதித்து வருகின்றன. எனினும், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளில் அந்நாட்டு மொழி களிலும் மருத்துவம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதே நாடுகளில் ஆங்கில வழியிலும் மருத்துவக் கல்வி சமீப ஆண்டுகளில் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வெளிநாடுகளின் மருத்துவக் கல்வி ஆலோ சகரும் ‘ஸ்டடி அப்ராட் எஜு கேஷன்ல் கன்ஸல்டன்ட்’ இயக்கு நருமான சி.சுரேஷ் பாபு கூறும் போது, ‘‘எம்.பி.பி.எஸ். படிப்பின் பாடங்களை உருவாக்குவதில் ரஷ்யா, ஐரோப்பா போன்ற நாடு களை சேர்ந்தவர்களின் பங்கு அதிகம். இதனால், அவர்களுக்கு மருத்துவக் கல்வி போதிப்பதில் மொழிப் பிரச்சனை வருவதில்லை. இந்நாடுகளில் வெளிநாட்டு மாண வர்கள் அதிகம் வரும் காரணத்திற் காகவும் ஆங்கிலக்கல்வி துவக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு கல்வியையும் தம் தாய்மொழியில் கற்பது நல் லது. இந்திய மொழியில் அதை போதிக்க படிப்படியாக முயன்றால் செய்யலாம்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x