Published : 18 Sep 2014 09:49 AM
Last Updated : 18 Sep 2014 09:49 AM

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி வன்முறை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த வழக்கை ஓர் ஆண்டுக் குள் விசாரித்து முடிக்க மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய தலைவரை நியமிக்கவும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதல் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சரவணன் கருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் அளித் துள்ள தீர்ப்பு விவரம்: இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவை நீதிமன்றத்தில் இன்னும் ஏற்கப்படவில்லை. மாநில மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் விசாரிக்கப் படவில்லை என்றும் கூறப்பட் டுள்ளது.

3 ஆண்டுகளாக காலி

மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி 3 ஆண்டுகளாக காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, 3 ஆண்டுகளாக இப்பதவியை காலியாக வைத்திருப் பதன் காரணம் புரியவில்லை. இப்பதவியை உடனே நிரப்ப வேண்டும்.

இந்த வழக்கை உரிய காரண மின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. சம்பவத்தின் போது அலட்சியம் காட்டிய போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விசாரணை நீதிமன்றம் வழக்கை நடத்தினாலே போதுமானது. எனவே, ஜார்ஜ் டவுன் மெட்ரோபாலி டன் மாஜிஸ்திரேட் இந்த வழக்கை விரைந்து விசாரித்து ஓர் ஆண்டுக் குள் முடிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றம் மேற்பார்வை

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும். மாஜிஸ் திரேட் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு ஒருமுறை வழக்கின் நிலவரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x