Published : 21 Sep 2018 09:02 AM
Last Updated : 21 Sep 2018 09:02 AM

5 இடதுசாரி ஆதரவாளர்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பீமா கோரேகான் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து இடது சாரி ஆதரவாளர்களை விடுதலை செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், பீமா கோரேகான் கலவரத்தை தூண்டிய தாக தொடரப்பட்ட வழக்கில் இடதுசாரி ஆதரவாளர்கள் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்யக் கோரி வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், பொருளா தார நிபுணர்கள் பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே, சமூக ஆர்வ லர் மஜா தாருவாலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 5 பேராசிரியர் களையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார் பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடி னர்.

இடதுசாரி ஆதரவாளர்கள் விடுதலையை எதிர்த்து துஷார் டாம்குடே என்பவர் உச்ச நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார். மகாராஷ்டிர அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x