Last Updated : 17 Sep, 2018 07:57 PM

 

Published : 17 Sep 2018 07:57 PM
Last Updated : 17 Sep 2018 07:57 PM

சாரிடான் உட்பட பெருநிறுவனங்களின் 3 எப்.டி.சி. மருந்துகளுக்குத் தடை நீக்கம்

 

சாரிடான் மாத்திரை உள்ளிட்ட 3 மருந்துகளை நாடுமுழுவதும் அனைத்து மருந்துக் கடைகளிலும் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

எப்டிசி எனப்படும், 2 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுமருந்து சேர்க்கை கொண்ட 328 வகை மருந்து,மாத்திரைகளை விற்பனை செய்ய கடந்த இரு நாட்களுக்கு முன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதில் சாரிடான் உள்ளிட்ட 3 வகை மருந்துகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரமல் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சாரிடான், கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் நிறுவனத்தின் பிரிடான், ஜக்கத் பார்மாவின் டார்ட் மற்றொரு மருந்து ஆகியவற்றுக்குத் தடை நீக்கப்பட்டுள்ளது. அதைச் சமயம் மற்ற மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

எப்டிசி எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளைக் குறிப்பிட்ட வீதத்தில் சேர்த்து தயாரிக்கப்பட்ட மருந்துகள், மாத்திரைகளை ஆய்வு செய்த இந்திய மருந்துவ தொழில்நுட்ப வாரியம் அதில் 344 வகை மருந்துகள், மாத்திரைகள் முறையற்ற வீதத்தில் சேர்த்து தயாரிக்கப்படுவதாக அறிக்கை அளித்தது. இந்த மருந்துகளால் உடல்நலத்துக்கு கேடுவிளையும் என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி இந்த மருந்துகள் விற்பனை உற்பத்திக்குத் தடைவிதித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பல்வேறு மருந்து நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் இந்த மருந்துகளை மீண்டும் இந்திய மருந்து தொழில்நுட்ப குழு ஆய்வு செய்தது. அதில் 349 மருந்துகளில் 328 மருந்துகள் மனித உடல்நலத்துக்கு கேடுவிளைக்கும் தன்மை கொண்டது என்று அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த 7-ம் தேதி 328 வகை எப்டிசி மருந்து, மாத்திரைகள் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சில மருந்து நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 11 ஆண்டுகளாக இந்த மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். இதில் உள்ள மருந்துகள் அனைத்தும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் தடை செய்துள்ள மருந்துகள் சேர்க்காமல் தயாரிக்கப்படுவது. இந்த மருந்துகள் வலிநிவாரணியாகவும், கழுத்து வலி, எலும்பு, மூட்டு, இடுப்பு வலி உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே பயன்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரமல் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சாரிடான், கிளாக்ஸோஸ்மித்க்லைன் நிறுவனத்தின் பிரிடான், ஜக்கத் பார்மாவின் டார்ட் மற்றொரு மருந்து ஆகியவற்றுக்கான தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x