Published : 26 Sep 2018 08:11 AM
Last Updated : 26 Sep 2018 08:11 AM

செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் 4 ஆண்டுகள் நிறைவு செய்த மங்கள்யான்

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான் செயற்கைக்கோள் 4 ஆண்டு நிறைவு செய்துள்ளது.

சூரிய மண்டலத்தின் 4-வது கிரகமும் பூமிக்கு அருகில் உள்ள கிரகமுமான செவ்வாயை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி, குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோளை, கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்த மங்கள்யான், சுமார் 9 மாத பயணத்துக்கு பிறகு 2014-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. செவ்வாய் சுற்றுவட்ட பாதையை மங்கள்யான் அடைந்து தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மங்கள்யானின் ஆயுட்காலம் 6 மாதமே என கூறப்பட்டாலும் செவ்வாயிலிருந்து கடந்த 4 ஆண்டு களுக்கும் மேலாக அறிவியல் புள்ளிவிவரங்களை மங்கள்யான் அனுப்பி வருகிறது.

இது தொடர்பாக இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (மங்கள் யான்) ட்விட்டர் பக்கத்தில், “செவ்வாயை சுற்றிவரத் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என கூறப்பட்டுள்ளது.

இத்துடன் மங்கள்யான் எடுத்த செவ்வாயின் ‘ஒலிம்பஸ் மான்ஸ்’ எரிமலை புகைப்படம் இணைக்கப் பட்டது. சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலையாக இது கண்டறியப்பட்டுள்ளது. மங்கள்யா னில் அதிநவீன புகைப்படக் கருவி உள்ளது. இதன் மூலம் இதுவரை 980-க்கும் மேற்பட்ட புகைப்படங் களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள் ளது. செவ்வாய் கிரகத்தின் வரை படத்தை தயாரிக்க விஞ்ஞானி களுக்கு மங்கள்யான் பெரிதும் உதவியுள்ளது.

செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்பும் முயற்சியில் சோவியத் யூனியன், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இவற்றில் எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இந்தியா மட்டுமே முதல் முயற்சி யில் வெற்றி பெற்றது. அதுவும் பிற நாடுகளை விட குறைந்த செலவில் (ரூ.450 கோடி) செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x