Last Updated : 12 Sep, 2018 12:09 PM

 

Published : 12 Sep 2018 12:09 PM
Last Updated : 12 Sep 2018 12:09 PM

ஹெச்டிஎஃப்சி துணைத்தலைவர் கொலை எதிரொலி: கார்ப்பரேட் அலுவலகங்கள், மால்களில் பாதுகாப்பு சோதனை

ஹெச்டிஎஃப்சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி பணத்துக்காகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட இடைவெளியில் அனைத்து கார்ப்பரேட் அலுவலகங்கள், மால்களில் பாதுகாப்பு சோதனை செய்ய மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மும்பை கமலா மில்லில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து கடந்த செப்.5-ம் தேதி அன்று காணாமல் போனார். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியது.

அப்போது ரத்தக் கறையுடன் கூடிய அவரின் கார் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்த விசாரணையில், சித்தார்த்திடம் இருந்து ரூ.30,000 பணத்தைப் பறிப்பதற்காக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதில் சித்தார்த்தின் அலுவலகம் இருந்த கமலா மில் பகுதியில் பார்க்கிங் பகுதியில் வேலை பார்த்த சர்ஃபராஸ் சேக் என்கிற ரயீஸ் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாகப் பேசிய காவல்துறை இணை ஆணையாளர் தேவன் பாரதி, ''வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சித்தார்த் தாக்கப்பட்டுள்ளார். அங்கு பாதுகாவலர்களோ, சிசிடிவி கேமராவோ இல்லை. இருந்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இதனையடுத்து அனைத்து துணை ஆணையர்களுக்கும் கார்ப்பரேட் அலுவலகங்கள், மால்களில் பாதுகாப்பு சோதனை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x