Last Updated : 06 Sep, 2018 08:35 AM

 

Published : 06 Sep 2018 08:35 AM
Last Updated : 06 Sep 2018 08:35 AM

இடதுசாரி ஆதரவாளர்களை கைது செய்ததற்கு  மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடனான தொடர்பே காரணம்: உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா போலீஸ் தகவல் 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுட னான தொடர்புக்கு கிடைத்த வலுவான சாட்சியங்களால் இடது சாரி ஆதரவாளர்கள் கைது செய் யப்பட்டனர் என்று உச்ச நீதி மன்றத்தில் மகாராஷ்டிரா போலீ ஸார் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் பகுதியில் ஏற்பட்ட கலவரம், பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் இடதுசாரி ஆதரவாளர் கள் கவிஞர் வரவர ராவ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத னிடையே இடதுசாரி ஆதரவாளர் கள் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, கவுதம் நவ்லகா ஆகியோரது கைதை எதிர்த்து வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட 5 பேர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந் தனர்.

இந்த வழக்கில் மகாராஷ்டிரா போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இந்நிலையில் நேற்று மகாராஷ்டிர போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மாவோ யிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், இடது சாரி ஆர்வலர்கள் 5 பேருக்கும் தொடர்பு உள்ளது. அதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. அதனால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துகளால் அவர்கள் கைது செய்யப்பட வில்லை.

மாவோயிஸ்ட்களுடன் அவர் களுக்குத் தொடர்பு உள்ளது என் பதை நிரூபிப்பதற்கான ஆதாரங் களான லேப்-டாப்கள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் போன்றவை எங்களிடம் உள்ளன. மேலும் அவர்கள் கைது செய்யப் படும் நிகழ்ச்சிகளை வீடியோவிலும் பதிவு செய்துள்ளோம். கைது செய் யப்படும்போது அவர்கள் எந்த வித துன்புறுத்தலுக்கும் ஆட் படுத்தப்படவில்லை என்பதை நிரூபிப்பதற்காக இந்த வீடியோ பதிவை மேற்கொண்டோம்.

அங்கு பறிமுதல் செய்யப் பட்ட அனைத்தும் தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள் ளது. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறோம்.

இடதுசாரி ஆதரவாளர்கள் கைதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள ரோமிலா தாப்பர், பொருளாதார நிபுணர்கள் பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சமூக வியலாளர் சதீஷ் தேஷ்பாண்டே, சட்ட நிபுணர் மஜா தருவாலா ஆகி யோர் இந்த வழக்கில் புதியவர்கள். இவர்கள் இந்த வழக்கில் ஏன் நுழைந்துள்ளனர் என்பது தெரிய வில்லை. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. -

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x