Published : 27 Sep 2018 09:04 AM
Last Updated : 27 Sep 2018 09:04 AM

போர் விமானம் தயாரிப்பதில் தொழில்திறன் இல்லாதவருக்கு ரூ..30 ஆயிரம் கோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

போர் விமானம் தயாரிப்பதில், அந்த தொழில்திறன் இல்லாத ஒரு வருக்கு ரூ.30 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள் ளார்.

ரஃபேல் போர் விமானம் கொள் முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும் பொதுத் துறை நிறுவனத்தை தவிர்த்துவிட்டு, தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகி றார்.

இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் பிரதமரின் SKILL India திட்டத்தை PM’S-KILL India திட்டம் என கேலி செய்துள்ளார்.

மேலும் அவர், “எச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ்) நிறுவனத்திடமிருந்து ரூ.30 ஆயிரம் கோடி திருடப்பட்டு, விமானம் தயாரிக்கும் தொழில் திறன் இல்லாத ஒருவரிடம் தரப்பட்டுள்ளது.

அதேவேளையில் 20 ஆண்டு களில் இல்லாத அளவில் லட்சக்கணக்கான திறன்வாய்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப் பின்றி உள்ளனர்” என குறிப் பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித் துள்ளதாக வெளியான செய்தி ஒன்றை ராகுல் தனது பதிவுடன் இணைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x