Published : 11 Jun 2019 06:06 PM
Last Updated : 11 Jun 2019 06:06 PM

மேற்குவங்கம் என்பது மத்திய அரசின் விளையாட்டு பொம்மையல்ல: மம்தா பானர்ஜி கடும் தாக்கு

மேற்குவங்கம் என்பது மத்திய அரசு மற்றும் பாஜகவின் விளையாட்டு பொம்மையல்ல என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் தேர்தல் நடந்தபோது, பாஜக தலைவர் அமித் ஷா வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டியும், ‘அமித் ஷா திரும்பிப் போ’ என்ற பதாகைகளைக் காட்டியும் கோஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.

இந்தக் கலவரத்துக்கு பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டினர். மத்திய அரசு இந்த சிலையை நிருவும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் மேற்குவங்க அரசே இந்த சிலையை அதே இடத்தில் வைக்கும் என மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்தார்.

இந்தநிலையில், உடைக்கப்பட்ட வித்யாசாகரின் சிலை அதே மீண்டும் வைக்கப்பட்டு. மம்தா பானர்ஜி இன்று திறந்துவைத்தார். நிகழ்ச்சியல் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசுகையில் ‘‘மேற்குவங்கத்தை பழிவாங்கும் செயலில் மத்திய அரசும், பாஜகவும் ஈடுபடுகிறது. மேற்குவங்கம் என்பது விளையாட்டு பொம்மையல்ல. உங்கள் விருப்பப்படி விளையாடுவதற்கு இந்த மாநில மக்கள் அனுமதிக்க மாட்டாரகள். பல ஆண்டுகளாக தேசத்துக்கே வழிகாட்டும் மாநிலமாக மேற்குவங்கம் விளங்குகிறது. பாஜகவின் மிரட்டலுக்கு திரிணமூல் காங்கிரஸ் அஞ்சாது’’ எனக்கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x