Last Updated : 01 Jun, 2019 12:00 AM

 

Published : 01 Jun 2019 12:00 AM
Last Updated : 01 Jun 2019 12:00 AM

பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அமைச்சரவையில் பங்கு பெறாத பின்னணி

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் பங்கு பெறவில்லை. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் புதிதாக அமையும் மத்திய அரசில் சில குறிப்பிட்ட மூத்த மற்றும் முக்கியத் தலைவர்கள் அமைச்சரவையில் தவறாமல் இடம் பெறுவது வழக்கம்.

ஆனால், இந்தமுறை பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் அவ்வாறு நடைபெறவில்லை. ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷவர்தன், டி.வி.சதானந்த கவுடா, ஸ்மிருதி இராணி முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மேந்தர் பிரதான் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளனர்.

அதேசமயம், பாஜகவின் முக்கியத் தலைவர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மேனகா காந்தி, உமா பாரதி, சுரேஷ் பிரபு, மனோஜ் சின்ஹா, ராஜ்யவர்தன் ராத்தோர், ஜெயந்த் சின்ஹா, உள்ளிட்ட சிலர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இவர்களில் முக்கியமானவராக மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி உள்ளார். இவரது உடல் நிலை குன்றியதன் காரணமாக கடந்தமுறை பதவியில் இருக்கும் போதே விடுப்பில் இருந்தார்.

இவருக்கு பதிலாக பிரதமர் மோடி அரசின் கடந்த வருட இடைக்கால பட்ஜெட்டை மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார். மாநிலங்களவை உறுப்பினரான ஜேட்லி கடந்த புதன்கிழமை பிரதமர் மோடிக்கு ஓரு கடிதம் எழுதி னார். அதில் தமது உடல்நிலை காரணமாக தன்னை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வேண் டாம் எனக் கேட்டுக் கொண் டிருந்தார்.

இதனால், ஜேட்லிக்கு பதிலாக பியூஷ் கோயல் நிதி அமைச்சராக அமர்த்தப்படுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வகித்த அதே பதவியை பியூஷுக்கு அளித்த பிரதமர் மோடி, நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனை அமர்த்தி உள்ளார். கடந்தமுறை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா கடந்த 1971-ல் இந்திரா காந்தி வகித்த பின் நிதித்துறைக்கு அமைச்ச ராகும் இரண்டாவது பெண் ஆவார். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜும் உடல்நிலை காரணமாக விலகிக் கொண்டார்.

இப்பதவியில் அவர் இந்திரா காந்திக்கு பின் இரண்டாவது பெண்ணாக வகித்து சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஏழு முறை மக்களவை உறுப்பினராக இருந்த சுஷ்மா இந்தமுறை தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தார். இவர் வகித்த பதவியில் தமிழரான எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாத ஐ.எப்.எஸ் அதிகாரியான ஜெய்சங்கரின் நுழைவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதியும் இந்த முறை தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார். இவரும் ஜேட்லியை போலவே கடந்த ஆட்சியில் உடல் நிலை காரணமாக அமைச்சரவை யில் இருந்து விலகி இருந்தார். தற் போது உடல்நிலை தேறினா லும் 18 மாதங்கள் புனித யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார்.

பெண் துறவியான உமாபாரதி இடத்தில் தீவிரவாத வழக்கில் சிக்கியுள்ள சாத்வி பிரக்யா தாக்கூர், ம.பி. மாநிலத்தின் போபால் எம்பியாக்கப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராக இருந்த பின் வர்த்தகத் துறைக்கு மாற்றப்பட்டவர் சுரேஷ் பிரபு. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவருக்கு இந்த முறை அமைச்சர் வாய்ப்பு கிடைக்க வில்லை. இதன் பின்னணியில் அவரது மாநில கூட்டணிக் கட்சியான சிவசேனா இருப்பதாகக் கருதப்படுகிறது. இதுபோல், பல்வேறு காரணங்களுடன் சிலர் அமைச்சராக இருந்தபோது நன்றாக செயல்படாமல் இருந்ததும் முக்கியமாக இருந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x