Published : 12 Jun 2019 08:16 AM
Last Updated : 12 Jun 2019 08:16 AM

ஊழல், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வருமான வரி அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வு: மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை

லஞ்சம், ஊழல், மிரட்டி பணம் பறித்தல், சொத்துக் குவிப்பு, பாலியல் தொந்தரவு போன்ற புகார்களின் அடிப்படையில் வருமான வரித் துறையின் 12 உயரதிகாரிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் கட்டாய ஓய்வு அளித்துள்ளது.

அதிகார அமைப்பை சுத்தம் செய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற் கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பிற துறை களிலும் மேற்கொள்ளப்பட்ட வாய்ப்புள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட 12 பேரும் இந்திய வருவாய்த் துறை (ஐஆர்எஸ்) அதிகாரிகள் ஆவர். இவர்களில் 7 பேர் ஆணையர்கள் (வருமான வரித் துறையில் மிக உயரிய பதவிகளில் ஆணையர் பதவியும் ஒன்றாகும்), ஒருவர் இணை ஆணையர், 3 பேர் கூடுதல் ஆணையர்கள் மற்றும் ஒருவர் துணை ஆணையர் ஆவார்.

இதுகுறித்து பெயர் கூறவிரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முறைகேடான செயல்களை உடனே விட்டொழிக்க வேண்டும் என அனைத்து நிலை அதிகார அமைப்புக்கும் இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் 12 அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் பொதுநலன் கருதி குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தின் கீழ் ஜூன் 11, 2019 பிற்பகல் முதல் இவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதாகவும் இவர்களுக்கு 3 மாத ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்கப்படு வதாகவும் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி இணை ஆணையர் அசோக் குமார் அகர்வால், ஆணையர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா, ஆணையர் அலோக் குமார் மித்ரா, ஆணையர் பி.அருளப்பா, ஆணையர் அஜய் குமார் சிங், ஆணையர் பி.பி. ராஜேந்திர பிரசாத், ஆணையர் ஹோமி ராஜ்வன்ஷ், ஆணையர் ஸ்வேதாப் சுமன், கூடுதல் ஆணையர் ஆன்டசு ரவீந்தர், கூடுதல் ஆணையர் விவேக் பத்ரா, கூடுதல் ஆணையர் சந்தர் சைன் பாரதி, துணை ஆணையர் ராம்குமார் பார்கவா ஆகியோருக்கு கட்டாய ஓய்வு வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை ஏன்?

இந்த கட்டாய ஓய்வு நடவடிக்கை பற்றி மற்றொரு அதிகாரி கூறியதாவது:

இந்த 12 அதிகாரிகள் மீதான புகார்களில் கடுமையான குற்றச்சாட்டுகளும் உள்ளன. சிலவற்றில் அந்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட அதிகாரி களில் ஒருவர் ஊழல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 1999 முதல் 2014 வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். ஆணையர் அந்தஸ் திலான 2 பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மற்றொரு அதிகாரி மீது குற்றச்சாட்டு உள்ளது.

ஓர் அதிகாரிக்கு எதிரான புகார்களில் அவர் ரூ. 12 கோடிக்கு சொத்துகளை குவித்துள்ளார் என்ற கடும் குற்றச்சாட்டும் உள்ளது.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மற்றொரு அதிகாரி மீது குற்றச்சாட்டு உள்ளது. இன்னொரு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதன் மூலம் ரூ.3 கோடிக்கு சொத்துகள் வாங்கியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

12 அதிகாரிகளில் ஒருவருக்கு திறமை யின்மை அடிப்படையில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிக வரிப் பிரச் சினைகள் கொண்ட முக்கிய வழக்குகளை மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதி காரிடம் ஒப்படைக்க இவர் தவறிவிட்டார். ஒரு கண்காணிப்பு அதிகாரியாக இவர் திறம்பட செயல்படத் தவறியது இதன் மூலம் நிரூபணம் ஆகியது.

இதுபோன்ற காரணங்களுக்காகவே 12 பேர் மீது கட்டாய ஓய்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x