Last Updated : 03 Jun, 2019 12:00 AM

 

Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM

மத்திய அரசின் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்பட்டால் ஆலோசனை வழங்குவோம்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தகவல்

மத்திய அரசின் செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டால் ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்குவோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

ஜனநாயக நடைமுறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நாட்டை வழிநடத்த அளவற்ற அதிகாரம் உள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. அரசின் செயல்பாட்டில் தடுமாற்றம் ஏற்படும்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு சாதகமான கருத்துடன் ஆலோசனை மற்றும் அறிவுரையை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில்தான் மோகன் பாகவத் இவ்வாறு பேசி உள்ளார்.

பின்னர் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் பாகவத் பேசும்போது கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர்கள் எவ்வளவு நற்பணிகளை செய்கிறார்கள் அல்லது மற்றவர்களுக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் அவர்கள் கர்வம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது. மேலும் சமூக சமத்துவம் ஏற்படவும் படிப்பறிவின்மையை அகற்றவும் தொண்டர்கள் பாடுபட வேண்டும். போதைமருந்து மற்றும் மது உள்ளிட்ட இதர தீய பழக்கங்களுக்கு பொதுமக்கள் அடிமையாவதை தடுத்து நிறுத்தவும் பாடுபட வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x