Published : 06 Jun 2019 10:33 AM
Last Updated : 06 Jun 2019 10:33 AM

வங்கதேச நடிகை அஞ்சு கோஷ் பாஜகவில் இணைந்தார்

வங்கதேசத்தைச சேர்ந்த பிரபல திரைப்பட நடிகையான அஞ்சு கோஷ் மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளை மட்டுமே கைபற்றியது. தேர்தல் முடிவு வெளியனா பிறகு, மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ உட்பட அடுத்தடுத்து பலர் பாஜகவில் இணைந்தது வருகின்றனர்.

இந்நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை அஞ்சு கோஷ் நேற்று பாஜகவில் இணைந்தார். மேற்குவங்க மாநில பா.ஜ. தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் கோல்கத்தாவில் அவர் பாஜவில் இணைந்தார். வங்கதேசத்தைச்சேர்ந்தரான நீங்கள், பா.ஜ.வில் இணைந்துள்ளீர்கள், இந்திய குடியுரிமை பெற்றுவீட்டீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே பஹான்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு கோஷ். முனன்ணி நடிகையான இவர் வங்கதேசத்தில் வெளியாகும் வங்க மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் வங்கதேசத்தில் மட்டுமின்றி மேற்குவங்கத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எனினும் அவர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேற்குவங்க மாநிலத்தில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x