Last Updated : 13 Jun, 2019 08:24 AM

 

Published : 13 Jun 2019 08:24 AM
Last Updated : 13 Jun 2019 08:24 AM

பெங்களூருவில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி; 3 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு

பெங்களூருவை சேர்ந்த முகமது மன்சூர் கான் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சிவாஜி நகரில் ஐஎம்ஏ (ஐ மானிட்டரி அட்வைசரி) நகைக் கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவரது நிதி நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய் துள்ளனர். இவர்களுக்கு, சந்தை நிலவரத்தின்படி 12 முதல் 30 சத வீதம் வரையில் வட்டி வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், முகமது மன்சூர் கான் மீது முகமது காலித் அகமது என்பவர் கடந்த வாரம் கமர்ஷியல் தெரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னிடம் முகமது மன்சூர் கான் ரூ. 1.3 கோடி ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முகமது மன்சூர் கான் தலைமறைவான நிலை யில், அவரது ஐ.எம்.ஏ. நகைக் கடையும் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக் கான வாடிக்கையாளர்கள், கடந்த 3 நாட்களாக‌ அந்த ந‌கைக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் 7,500-க்கும் மேற் பட்டோர் கமர்ஷியல் தெரு காவல் நிலையத்தில் முகமது மன்சூர் கான் மீது நிதி மோசடி புகார் அளித் துள்ளனர். இதுவரை அளிக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், முக மது மன்சூர் கான் ரூ. 5 ஆயி ரம் கோடிக்கும் அதிகமாக மோசடி யில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப் படுகிறது.

தற்கொலை மிரட்டல்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கமர்சியல் தெரு போலீஸார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், முகமது மன்சூர் கான் வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அரசியல்வாதிகளால் எனது தொழில் நஷ்டம் அடைந்துள்ளது. நான் வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணத்தில் ரூ. 400 கோடியை சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ரோஷன் பெய்கிற்கு கடனாக கொடுத்துள்ளேன். கடனை திருப்பித் தருமாறு பலமுறை கேட் டும் அவர் தர மறுக்கிறார். எனது பணம் திரும்பி கிடைக்கா விட்டால் தற்கொலை செய்து கொள் வேன்’’என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டை எம்எல்ஏ ரோஷன் பெய்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முதல்வர் உத்தரவு

இதனிடையே, இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘’ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி விவகாரத்தை குற்றப் பிரிவு விசாரணையில் இருந்து சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப் படுகிறது. இந்த விவகாரத்தை விரைந்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச் சகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். முகமது மன்சூர் கான் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் கிடைக்க கர்நாடக அரசு பாடுபடும் என்றார்.

இந்நிலையில், ஐஎம்ஏ நகைக் கடையின் நிர்வாக பொறுப்பில் இருந்த 6 பேர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸில் சரணடைந் துள்ளனர். போலீஸாரின் விசா ரணையில் நகைக் கடையின் உரிமை யாளார் முகமது மன்சூர் கான் ஐக்கிய அரபு நாட்டுக்கு தப்பி யோடிவிட்டதாக தெரியவந்துள் ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x