Published : 02 Jun 2019 07:50 AM
Last Updated : 02 Jun 2019 07:50 AM

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை; நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலனுக்கே முன்னுரிமை: மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமித் ஷா உறுதி

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய உள் துறை அமைச்சராக நேற்று பொறுப் பேற்றுக் கொண்ட அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

இதுபோல, நாட்டின் பாதுகாப் புத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 352 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 30-ம் தேதி குடி யரசுத் தலைவர் மாளிகை வளாகத் தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழா வில் நரேந்திர மோடி 2-வது முறை யாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதுபோல, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதா ராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் உள் ளிட்ட 57 பேர் மத்திய அமைச்சர் களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், அமைச்சர்களுக் கான இலாக்கா 31-ம் தேதி ஒதுக்கப்பட்டது. இதன்படி, அமித் ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத் துறை, நிர்மலா சீதாராமனுக்கு நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை, ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை ஒதுக்கப்பட்டது.

அன்றைய தினமே நிர்மலா சீதாராமன் (60) நாட்டின் புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம் முழு நேர நிதித் துறை அமைச்சாரான முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1970-71-ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி நிதித் துறையை கூடுதலாக கவனித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், பொரு ளாதாரம் படித்துள்ளார். 2014-ல் நிதித் துறை இணையமைச்சராக பொறுப்பேற்ற இவர், 2017 முதல் 2019 மே 30 வரை பாதுகாப்புத் துறை (கேபினெட்) அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அலுவலகத்துக்குச் சென்ற அவரை உள்துறை செய லாளர் ராஜீவ் கவுபா, உளவுத் துறை தலைவர் ராஜீவ் ஜெயின் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்ற னர். கேரள ஆளுநர் பி.சதாசிவம் மற்றும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் அமித் ஷாவுக்கு முதல் முறையாக வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அமித் ஷா ட்விட்டரில், “நாட்டின் உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண் டேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை வழங்கிய பிர தமர் மோடிக்கு நன்றி. நாட்டின் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் நலனுக்கும் மோடி அரசு முன் னுரிமை வழங்கும். மோடி தலைமை யின் கீழ் என்னால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்ற முயற்சி செய்வேன்” என பதிவிட்டுள்ளார்.

அமித் ஷாவைத் தொடர்ந்து, கிஷண் ரெட்டி மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய இருவரும் உள்துறை இணையமைச்சர்களாக பொறுப் பேற்றுக் கொண்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ 1 அரசில் உள்துறை அமைச் சராக இருந்த ராஜ்நாத் சிங், பாது காப்புத் துறை அமைச்சராக நேற்று மதியம் பொறுப்பேற்றுக் கொண் டார். முன்னதாக, நேற்று காலையில் தேசிய போர் நினைவிடத்துக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்தி னார். பின்னர் பாதுகாப்பு அமைச் சக அலுவலகத்துக்கு வந்த அவரை முப்படைத் தளபதிகள், இணை அமைச்சர் பாத் யசோ நாயக், துறை செயலாளர் சஞ்சய் மித்ரா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் ராஜ்நாத் சிங் தலைமை யில் உயர்மட்ட ஆலோசனை நடை பெற்றது. இதில் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப் படை தளபதி ஏர் சீப் மார்ஷல் பி.எஸ்.தனோவா மற்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கடற் படை தளபதி கரம்பீர் சிங், பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற னர். அப்போது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தளபதி கள் அமைச்சரிடம் எடுத்து கூறினர்.

சுஷ்மா வழியை பின்பற்றுவேன்

முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரும் தமிழருமான எஸ். ஜெய்சங்கர் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய முதல் ட்விட்டர் பதிவு. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் வழியை பின் பற்றுவதில் பெருமை அடைகிறேன். உங்களுக்காக 24 மணி நேரமும் செயல்படுவோம்” என பதிவிட்டு உள்ளார்.

வேளாண்மை மற்றும் விவசாயி கள் நலத் துறை அமைச்சராக நரேந் திர சிங் தோமர் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து இணை அமைச்சர்களாக புருஷோத்தம் ருபாலா, கைலாஷ் சவுத்ரி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x