Last Updated : 14 Jun, 2019 03:55 PM

 

Published : 14 Jun 2019 03:55 PM
Last Updated : 14 Jun 2019 03:55 PM

டிக் டாக்குக்காக விளையாட்டு விபரீதமானது: தவறுதலாக நாட்டுத் துப்பாக்கியை இயக்கியதால் சிறுவன் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழப்பு

டிக் டாக் செயலியில் துப்பாக்கிவைத்து விளையாடுவதுபோல ஒரு காட்சியை வீடியோவில் பதிவுவேற்றுவதற்காக முயற்சித்தபோது தவறுதலாக சிறுவன் உடலில் குண்டுபாய்ந்து உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நேற்று நடந்துள்ளது

மகாராஷ்டிராவின் ஷீரடி நகரின் ஒரு தங்கும்விடுதியில் நடந்த இச்சம்பவத்தின் விவரம் வருமாறு:

பவான் தாம் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் டிக் டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக சில காட்சிகளை படம்பிடிக்க முயன்றனர். அப்போது விளையாட்டாக அவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி ஒன்றினால் சுடுவதைப்போல ஒரு காட்சியை ஒரு செல்போனில் படம்பிடித்தனர்.

அப்போது தவறுதலாக டிரிக்கரை அழுத்த துப்பாக்கியிலிருந்து தோட்டா ஒன்று பிரதீக் வடேகரின் உடலில் பாய்ந்ததது. இதில் வலியால் துடிதுடித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், ''இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் இறப்புக்கு காரணமான அவனது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இக்கொலைச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பயங்கர ஆயுதங்கள் அவர்கள் கைக்கு எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம். நாங்கள் பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் சிறுவர்கள் பயன்படுத்தும் செல்போன்களில் டிக்டாக் செயலிக்கு தடை போடுங்கள் என்பதுதான்.''

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x