10 ஆண்டில் 17 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம்: ‘ஜென்-ஸி’ தலைமுறையினருக்கு மத்திய அரசு தகவல்

10 ஆண்டில் 17 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம்: ‘ஜென்-ஸி’ தலைமுறையினருக்கு மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 10 ஆண்​டு​களில் (2014 - 2024) இந்​தி​யா​வில் 17 கோடிக்​கும் அதி​க​மான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்​ள​தாக மத்திய அரசு தெரி​வித்​துள்​ளது.

இளைஞர்கள் மற்​றும் ஜென்​-ஸி தலை​முறை​யினரிடையே வேலையின்மை குறித்த கவலை அதி​கரித்து வரு​கிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் கட்சி எம்​.பி.க்​கள் கூட்டம் நேற்று நடை​பெற்​றது. இதில் வேலை​வாய்ப்​பு, திறன் மேம்பாடு மற்​றும் சமூகப் பாது​காப்பு குறித்த 10 ஆண்​டு​கால அறிக்​கையை மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்​புத் துறை அமைச்​சர் மன்சுக் மாண்டவியா சமர்ப்​பித்​தார்.

அதில் அவர் கூறிய​தாவது: வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யாவை உருவாக்​க, வேலை​வாய்ப்பு உரு​வாக்​கம் மற்​றும் திறன் மேம்பாட்டுக்கு மத்​திய அரசு முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி(யுபிஏ) ஆட்​சி​யின்​போது (2004 - 2014) இந்​தியா உலகின் 10-வது பெரிய பொருளா​தா​ர​மாக இருந்தது. அப்​போது வேலை​வாய்ப்பு வளர்ச்சி மிக​வும் மெதுவாகவே இருந்​தது.

ஆனால், இந்​திய ரிசர்வ் வங்​கி​யின் தற்​போதைய தரவு​களின்​படி 2014 முதல் 2024 வரையி​லான காலத்​தில் நாட்​டில் 17 கோடிக்​கும் அதி​க​மான வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இது யுபிஏ ஆட்​சிக் காலத்​தை​விட சுமார் 6 மடங்கு அதி​கம். கடந்த பத்​தாண்​டு​களில் ஆண்டுக்கு சராசரி​யாக 1.7 கோடி வேலைவாய்ப்புகள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

தொழிலா​ளர் வைப்​புநிதி அமைப்​பில் (இபிஎஃப்ஓ) பதிவு செய்​யப்​பட்ட நிறு​வனங்​கள் மற்​றும் வேலை​வாய்ப்​பு​களின் எண்​ணிக்கை பெரு​மள​வில் உயர்ந்​து, அமைப்​பு​சார் துறை​யில் கணிச​மான வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது. உலக வங்கி மற்​றும் கால​முறை தொழிலா​ளர் சக்தி கணக்​கெடுப்பு (பிஎல்​எப்​எஸ்) தரவு​களின்​படி, நாட்​டின் வேலை​யின்மை விகிதம் 3.1 சதவீத​மாகக் குறைந்துள்ளது. இது உலகளா​விய சராசரி​யான 4.8 சதவீதத்தை விட மிக​வும் குறை​வாகும்.

ஜி20 அமைப்​பில் உள்ள பல முக்​கிய வளர்ந்த மற்​றும் வளர்ந்து வரும் நாடு​களு​டன் ஒப்​பிடு​கை​யில் இந்​தி​யா​வின் வேலை​வாய்ப்பு குறி​யீடு​கள் சிறப்​பான இடத்​தில் உள்​ளன. நிதி ஆயோக் தரவு​களின்​படி, 2014 முதல் 2023 வரையி​லான காலத்​தில் சுமார் 25 கோடி மக்​கள் வறுமையி​லிருந்து மீட்​கப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

10 ஆண்டில் 17 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம்: ‘ஜென்-ஸி’ தலைமுறையினருக்கு மத்திய அரசு தகவல்
ஜென்ஸீ இளைஞர்களை சந்திக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் - அபிஜித் தீப்கே ரியாக்‌ஷன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in