ஜென்ஸீ இளைஞர்களை சந்திக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் - அபிஜித் தீப்கே ரியாக்‌ஷன்

‘இளைஞர் பிரதிநிதித்துவம் அவசியம்’
அபிஜித் தீப்கே

அபிஜித் தீப்கே

Updated on
2 min read

மும்பை: “ஆர்எஸ்எஸ் முன்னெடுக்கும் இளைஞர்களுடனான உரையாடல்கள் ஜென்ஸீ குரல்களால் முன்னெடுக்கப்பட்டால், அவை மேலும் அர்த்தமுள்ளதாக இருக்கும்,” என்று சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வரும் 6-ம் தேதி மும்பையில், ஜென் ஆல்ஃபா, ஜென்ஸீ மாணவர்களை சந்திக்கவிருக்கும் நிலையில், அதை வரவேற்றுள்ள சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே, அதே வேளையில் இந்த சந்திப்பில் இளைஞர்கள் பிரதிநிதித்துவம் அவசியம். இளைஞர்களுடனான உரையாடலை ஜென்ஸீ குரலடையுவர்கள் தான் முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில், வினாத்தாள் கசிவை கண்டித்து நடக்கும் மாணவர் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

வரும் 9-ம் தேதி நாடு முழுவதும் 100 நகரங்களில் இருந்து 15 வயது முதல் 19 வயது வரையிலான ஜென் ஆல்ஃபா, ஜென்ஸீ இளைஞர்கள் 2,000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் மும்பையில் கலந்துரையாடுகிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் தீப்கே, “இளைஞர்களுடனான உரையாடல் என்பது வரவேற்கத்தக்கது. ஒரு நேர்மறையான நகர்வு. ஆனால், இளைஞர்களுடனான உரையாடலை ஜென்ஸீ குரல் முன்னெடுப்பதும் சமமான முக்கியத்துவம் கொண்டது.

இளைஞர்கள் தான் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் ரீல் போஸ்ட் செய்ய உந்து சக்தியாக இருந்தார்கள். இன்று அவர்கள்தான் மோகன் பாகவத்தையும் தங்களுடன் உரையாடத் தூண்டியுள்ளனர்.

இது காலதாமதமான நகர்வு என்றாலும் கூட ஜென்ஸீ இளைஞர்களை இனி அரசியலில் ஓரங்கட்டவோ, அப்புறப்படுத்தவோ முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்களுடன் பேசுவது அவசியம்.

அதேபோல் இளைஞர்களுடன் இளைஞர்கள் பேசுவதுதான் அவசியம். அதுதான் சிறப்பான நகர்வாக இருக்கும். 70 அல்லது 80 வயதுடையோர் இளைஞர்களுடன் நல்லமுறையில் பேசுவார்கள் தான், ஆனால் தங்கள் வயது ஒத்த நபர்களிடமிருந்து வரும் பேச்சில்தான் அவர்கள் பலனடைவார்கள்” என்றார்.

கடந்த ஜூலை 25-ல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில் இன்று அபிஜித் தீப்கே தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, ராஞ்சியின் ஜெய்பால் சிங் முண்டா திடலில் கடந்த 29-ம் தேதி முதல் ஜார்க்கண்ட் அரசுத் தேர்வாணையம் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடி வரும் மாணவர்களுக்கும் ஆதரவு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “போராடும் மாணவர்கள் கூடாரம் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கழிவறை வசதி இல்லை. இதேபோலத்தான் நாங்கள் ஜந்தர் மந்தர் பகுதியிலும் நடத்தப்பட்டோம். இந்த வேளையில் அவர்களுக்கு எங்களின் முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், தன் மீதான முறைகேட்டை விசாரிக்க பிற மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நிதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க மாணவர்கள் போராடிவருகின்றனர். ஆனால், அம்மாநில அரசு சிஐடிக்கு வழக்கை ஒதுக்கியுள்ளது.

வேலைவாய்ப்பு ஊழலில் பெருமளவு பணம் கைமாறியுள்ளது என்பது மாணவர்களின் புகாராக உள்ளது.

<div class="paragraphs"><p>அபிஜித் தீப்கே</p></div>
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு... ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in