Last Updated : 01 Mar, 2018 06:10 PM

 

Published : 01 Mar 2018 06:10 PM
Last Updated : 01 Mar 2018 06:10 PM

ஓடும் ரயிலில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னிலையில் திருமணம் செய்த ஜோடி

ஓடும் ரயிலில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னிலையில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் இருந்து லக்னோவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. அதில் பயணம் செய்த மருந்துவிற்பனை பிரதிநிதியான சச்சின் குமார், வருமான வரித்துறையில் பணியாற்றும் ஊழியர் ஜோட்ஸ்னா சிங் படேல் ஆகியோர் ரவிசங்கர் முன் திருமணம் செய்தனர்.

இதில் மணமகன் சச்சின் குமார் உத்தரப்பிரேதேசம் , கவுசாம்பி மாவட்டம், உதானி குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர். மணப்பெண் படேல் பதோனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்

இந்த திருமணம் குறித்து வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் கூறுகையில், “ நான் பயணித்த இதே ரயிலில் இந்த ஜோடியும் பயணம் செய்துள்ளனர். இவர்கள் திடீரென என்னிடம் வந்து உங்கள் முன் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், ஆசிர்வதிக்க கோரினார்கள். என் ஆசியுடன் அவர்களிடம் திருமணம் நடந்தது.

இவர்களைப் போல் அனைவரும் எளிமையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதிகமான செலவுகளையும், திருமணத்துக்காக கடன் பெறுவதையும் தவிர்த்து எளிமையாக திருமணம் செய்ய வேண்டும்.

ரயில்வே வரலாற்றிலையே முதல் முறையாக ஓடும் ரயிலில் திருமணம் நடந்துள்ளது என நினைக்கிறேன். இவர்களுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார். ரயிலில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு சகபயணிகள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதை பதிவை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x