Last Updated : 27 Mar, 2018 03:49 PM

 

Published : 27 Mar 2018 03:49 PM
Last Updated : 27 Mar 2018 03:49 PM

மஹாராஷ்டிராவில் பெண் குழந்தை கடத்தல்; குஜராத்தில் கொலை: சிசிடிவியில் தெரிந்தவர்போல் நடிக்கும் பெண் யார்?

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை மிகவும் தெரிந்தவர்போல வந்து கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத பெண்தான் இந்த கொலைக் குற்றத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சிசிடிவி கேமரா அடையாளம் காட்டுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். குழந்தையைக் கடத்திய பெண் குஜராத்திற்கு அழைத்துச் சென்று அக்குழந்தையைக் கொன்றுள்ளார்.

பின்னர் ரயில்நிலையம் ஒன்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்பெண்ணைப் பிடிக்க போலீஸார் மஹாராஷ்டிரா விரைந்துள்ளனர்.

கடந்த வாரம் சனிக்கிழமை இக்குழந்தை மஹராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தின் நலசோப்ராவிலிருந்து கடத்தப்பட்டுள்ள வழக்கும், இறந்த சடலமாக குஜராத் மாநிலம் நவ்சாரி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்ட வழக்கும் தற்போது புதிய புள்ளிகளை இணைத்துள்ளது.

மஹராடிராஷ்டிராவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைதான் கடத்திச் சென்று குஜராத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

நவ்ஸாரி அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு அக்குழந்தையின் உடல் பல்கார் காவல் அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

நவஸாரிக்கு இறந்த குழந்தையின் தந்தை வந்திருந்தார். நவஸாரி ரயில் நிலையம், அலகாபாத்திலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும் நலசோபராவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதற்கிடையில், பல்கார் பிரிவில் உள்ள துளிஞ்ச் காவல்நிலைய போலீஸார், 5 வயது பெண் நலஸோப்பராவில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 24) அன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை ஒரு அடையாளம் தெரியாத பெண் கடத்திச் சென்றதாகக் கூறினர்.

கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை சந்தோஷ் பாலச்சந்திர சரோஜ், உடனே காவல் நிலையத்தை நாடி புகார் செய்தார். சட்டப்பிரிவு இபிகோ 363-ன் கீழ் கடத்தல் வழக்கில் அவரது புகார் மனு பதிவு செய்யப்பட்டது.

விரார் கோட்டத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த் பாஜ்பாலே கடத்தல் நடந்த தெருவில் குழந்தை உயிரோடு இருக்கும் சிசிடிவி கேமரா பதிவு விவரம் குறித்து தெரிவித்ததாவது:

அப்பெண் குழந்தையின் வீட்டுக்கு வெளியே குழந்தையைக் கடத்திய பெண் கடந்த சனிக்கிழமை மாலை குழந்தை கடத்தப்படுவதற்கு முன், ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணிநேரம் வரை காத்துக் கொண்டிருப்பதை சிசிடிவி கேமரா காட்டுகிறது. அதுமட்டுமின்றி அப்பெண் குழந்தையை மிகவும் தெரிந்தவர் போல நடித்துக் கொண்டிருப்பதும் அதில் பதிவாகியுள்ளது.

அக்குழந்தை இன்னொரு குழந்தையுடன் விளையாடச் செல்லும் நேரம் வந்தவுடன், இப்பெண் அக்குழந்தையை இங்கிருந்து அழைத்துச் சென்றார்.

இக்குழந்தையுடன் அப் பெண் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்திச் சென்ற காட்சிகளை சிசிடிவி கேமரா பதிவு செய்துள்ளது.

குழந்தையைக் கடத்திய பெண் இப்பகுதியில்தான் எங்கேயோ வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது இந்தப் பகுதியை நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும் என காவல்துறை சந்தேகப்படுகிறது. இந்த திசையிலிருந்து எங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, நவஸாரியில் ஒரு பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி எங்களுக்கு கிடைத்தது. விசாரணையின் அடிப்படையில் போலீஸார் அப்பெண்ணை தேடி வருகின்றனர். நிச்சயம் இக்குழந்தையைக் கொன்ற கொலையாளி பிடிபடுவார்'' என்றார்.

இதற்கிடையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் துளிஞ்ச் காவல் நிலையத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ''குழந்தையைக் கடத்திச் சென்று கொன்ற பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும்'' என அவர்கள் கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x