Published : 25 Sep 2014 09:30 AM
Last Updated : 25 Sep 2014 09:30 AM

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு சரியானதுதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது: “2006 முதல் 2009 வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதன் மூலம், அரசுக்கு ரூ. 1.86 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து கூறிவந்துள்ளோம்.

எங்களின் குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களை வெளிப்படையான நடைமுறையின் மூலம் மீண்டும் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

நிலக்கரித்துறையில் சீர்திருத் தத்தை மேற்கொள்ள மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது” என்றார். கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 214 நிலக்கரிச் சுரங்க உரிமங்களை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கருத்து

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது: “1993-ம் ஆண்டி லிருந்து மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் பாஜக உள்பட பல்வேறு கட்சிகளின் தலைமையில் மத்தியில் ஆட்சி நடைபெற்றுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் செயல் பாட்டை மட்டும் குறைகூறுவது ஏற்புடையதல்ல” என்றார்.

அதோடு, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மின் உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத் தும். மின் உற்பத்தி நிறுவனங் களுக்கு வங்கிகள் கோடிக்கணக் கான ரூபாயை கடனாக வழங்கி யுள்ளன. அந்த கடனை நிறுவனங் கள் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்துத் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x