Last Updated : 05 Mar, 2018 10:53 AM

 

Published : 05 Mar 2018 10:53 AM
Last Updated : 05 Mar 2018 10:53 AM

காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் போராட்டம் எதிரொலி: பலத்த பாதுகாப்பு

காஷ்மீரின் சில பகுதிகளில் பிரிவினைவாதிகள் இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீரில் மூன்று தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், சோபியன் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு போராளி சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, சையது அலி கிலானி, மிர்வெய்ஸ் உமர் ஃபாரூக் மற்றும் முகம்மது யாசின் மாலிக் ஆகிய பிரிவினைவாதிகளின் கூட்டமைப்பான ஜாயின்ட் ரெசிடென்ஸ் லீடர்ஷிப் ஜேஆர்எல் அமைப்பு இன்று வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ராணுவத்தின் கருத்துப்படி, ராணுவத்தின் நடமாடும் வாகனச் சோதனை சாவடி வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தியபின் பின்னர்தான் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில், பொதுமக்களில் இறந்த இன்னொருவரின் உடல், குவார் அஹ்மத் லோன் (24), என்று இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறையினர் கூறியதாவது: "ஸ்ரீநகரின் மைசுமா மற்றும் கிரல்குட் காவல் நிலையங்களின் அதிகார வரம்புக்குள் வரும் சில பகுதிகளில் மட்டும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான பகுதி கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது."

இன்று நடத்துவதாக இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ரத்து செய்வதாக காஷ்மீர் மாநில அரசு தேர்வாணையக்குழு உத்தரவிட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரில் இணைய மற்றும் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகரில் கடைகள், பிற தொழில் பணியிடங்கள், பொது போக்குவரத்து ஆகியவைகளும் இன்று மூடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x