Published : 02 Mar 2018 01:26 PM
Last Updated : 02 Mar 2018 01:26 PM

மறுமணம் செய்துகொள்ள விவாகரத்து வேண்டும்: மேல்முறையீடு வழக்கு விசாரணையில் ஒமர் அப்துல்லா வாதம்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா தனது முன்னாள் மனைவி பாயல் அப்துல்லாவை விவாரத்துக் கோரும் மேல்முறையீட்டு வழக்கு வியாழக்கிழமை (நேற்று) புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் ஒமர் அப்துல்லா சார்பில் வழக்கறிஞர் மாளவிகா ராஜ்கோட்டா ஆஜரானார்.

அப்போது பேசிய ஒமர் அப்துல்லா, 'தனது திருமண வாழ்க்கை இனி சீர்செய்யமுடியாத அளவுக்கு உடைந்துவிட்டதாகவும் 2007லிருந்தே தான், திருமணத்துக்குரிய உறவை அனுபவிக்கவில்லை'' என்றும் தெரிவித்தார்.

இம்மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, நீதிபதி சித்தார்த் மிரிதுல் மற்றும் நீதிபதி தீபா சர்மா அடங்கிய அமர்வு, ''இவ்வழக்கு மறுவிசாரணைக்கு வரும் ஏப்ரல் 23 அன்று வருவதற்குமுன் பாயல் அப்துல்லா(ஒமர் அப்துல்லா மனைவி) பதில் தரவேண்டும்'' எனக்கூறினர்.

உரிய பதில் அனுப்புமாறு பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ஏற்கெனவே விசாரித்த விசாரணை நீதிமன்றம் ஆகஸ்ட் 30 2016ல் அவரது விவாகரத்து கோரும் வழக்கை தள்ளுபடி செய்ததது. அத்தீர்ப்பில், விவாகரத்து ஆணையை வழங்கக் கோருவதற்கு அடித்தளமாக இருந்த "கொடூரமான அல்லது கைவிடுதல்" போன்ற அவரது கூற்றுக்களை ஒமர் அப்துல்லாவால் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. திருமண உறவு முறிந்ததற்கான காரணங்களை நிரூபிக்கத் தவறியதாக அப்போதைய விசாரணையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பை எதிர்த்து அதற்கு சவால் விடும்வகையில் ஒமர் அப்துல்லா தற்போது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஒமர் அப்துல்லா பாயல் அப்துல்லா தம்பதிகள் செப்டம்பர் 1, 1994ல் திருமணம் செய்துகொண்டனர். 2009லிருந்து பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு பிறந்த 2 மகன்களும் தற்போது தனது தந்தையுடன் இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x