Last Updated : 25 Mar, 2018 05:01 PM

 

Published : 25 Mar 2018 05:01 PM
Last Updated : 25 Mar 2018 05:01 PM

மாநிலங்களவையில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்: ரூ.4,000 கோடி சொத்துள்ள பீஹார் எம்.பி, 1000 கோடி வைத்துள்ள பெண் எம்பி.

மாநிலங்கள் அவையில் உள்ள எம்.பி.க்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்றும் தெரியவந்துள்ளது.

மாநிலங்கள் அவை எம்.பி.க்களின் சொத்துக்கள் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மாநிலங்களவையில் உள்ள 229 எம்.பி.க்களில் 201 எம்.பி.க்கள் 88 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதில் எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.55.62 கோடியாகும்.

இதில் அதிகபட்சமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. மகேந்திர பிரசாத்துக்கு ரூ.4 ஆயிரத்து 78.41 கோடி சொத்துக்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ஜெயா பச்சனுக்கு ரூ. ஆயிரத்து 64 கோடி சொத்துக்கள் இருக்கின்றன.

அதைத் தொடர்ந்து பாஜக எம்.பி. ரவிந்திர கிஷோர் சின்ஹாவுக்கு ரூ.857.11 கோடி சொத்துக்கள் உள்ளன.

கட்சிகளின் அடிப்படையில் பாஜக எம்பிக்களில் 64 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.27.80 கோடியாகும், இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 50 பேரின் சராசரி சொத்துமதிப்பு ரூ.40.98 கோடியாகும்.

சமாஜ்வாதி கட்சியின் 14 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.92.68 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.22 கோடியாகும்.

இதில் 229 மாநிலங்கள் அவை எம்.பி.க்களில் 51 பேர் மீது கிரிமினல் வழக்குகள் அறிவிக்கப்பட்டு விசாரணையில் இருக்கின்றனது. இதில் 20 எம்.பி.க்கள் மீது மிகத் தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதில் 154 எம்.பி.க்கள் வேட்புமனுத் தாக்கலின் போது வழங்கிய பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x