Last Updated : 06 May, 2019 12:00 AM

 

Published : 06 May 2019 12:00 AM
Last Updated : 06 May 2019 12:00 AM

கார் கவிழ்ந்து பாஜக தொண்டர்கள் 5 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசம் மண்டி மாவட்டத்தில் நேற்று சாலையோர பள்ளத்தில் கார் விழுந்ததில் பாஜக தொண்டர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

சிராஜ் தாலுக்கா பக்திதார் பகுதியில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் பங்கேற்கும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள இவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததுஇந்த கார் பகாசனநோகி மலைப் பகுதியில் சென்றபோது தடுமாறி சாலையோரத்தில் உள்ள 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்தது.

காரில் சென்ற 5 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். கார் டிரைவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x