Last Updated : 12 May, 2019 12:00 AM

 

Published : 12 May 2019 12:00 AM
Last Updated : 12 May 2019 12:00 AM

விமானப் படைக்கு கூடுதல் பலம்: அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்கியது அமெரிக்கா

அதிநவீன வசதிகள் கொண்ட அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டரை, அமெரிக் காவின் போயிங் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கியது.

அமெரிக்காவின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’, போர் ஹெலிகாப்டர்களையும் தயாரித்து வரு கிறது. அவற்றில், ‘ஏஎச்-64இ(ஐ)’ அப் பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் அதிநவீனமானவை. இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 22 அப்பாச்சி கார்டி யன் ஹெலிகாப்டர்களை வாங்க, இந்தியா கடந்த 2015-ம் ஆண்டு ‘போயிங்’ நிறுவனம் மற்றும் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, முதல் அப்பாச்சி கார்டியன் ஹெலி காப்டரை இந்திய விமானப் படை அதிகாரிகளிடம் போயிங் நிறுவனம் நேற்று முன்தினம் ஒப்படைத்தது.

அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள மெசா பகுதியில், போயிங் உற் பத்தி தொழிற்சாலையில், அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர் கடந்த 10-ம் தேதி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்று இந்திய விமானப் படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் அனுபம் பானர்ஜி தெரிவித்தார்.

இந்த ஹெலிகாப்டரால் இந்திய விமானப் படையின் பலம் அதிகரிக்கும். மேலும், எதிர்க்கால தேவைக்கு ஏற்பவும் பல்வேறு அம்சங்களுடன் இந்த ஹெலிகாப்டர் இருக்கும் என்று விமானப் படை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒப்பந்தத்தின்படி, மேலும் மேலும் சில ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதம் கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பி வைக் கப்பட உள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் உயர்ந்த மலைகள், கடுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளிலும் எளிதாக பறக்கும் திறன் படைத்தவை. இரவிலும் துல்லியமாக இலக்கை தாக்கும் வசதி கொண்டது. போர் களத்தில் இருந்து படங்களை அனுப்பும் வசதியும் இதில் உள்ளது.

இந்த ஹெலிகாப்டரை இயக்குவது தொடர்பாக அலபாமாவில் உள்ள அமெரிக்கா ராணுவ தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x