Last Updated : 26 May, 2019 12:00 AM

 

Published : 26 May 2019 12:00 AM
Last Updated : 26 May 2019 12:00 AM

தேர்தல் தோல்வி விரக்தியில் தகராறு செய்தாரா நிகில்?- முதல்வர் குமாரசாமி மறுப்பு

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் கவுடா மஜத சார்பில் மண்டியாவில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தோல்வியின் காரணமாக விரக்தி அடைந்த நிகில், மைசூருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதனால், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், “#நிகில் ஹெல்லியதப்பா?'' (நிகில் எங்கு இருக்கிறீர்?) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

இதில் கோபமடைந்த நிகில், விடுதியில் மதுபோதையில் தகராறுசெய்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மகனின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இதுபோன்ற செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியரை தொடர்பு கொண்டு எனது மனவேதனையை பகிர்ந்து கொண்டேன். ஊடகங்கள் இதுபோன்ற பொய் செய்திகளை தவிர்க்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு விடுதியிலும் நிகில் தகராறு செய்து, ஊழியர்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x