Published : 06 May 2019 02:21 PM
Last Updated : 06 May 2019 02:21 PM

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 3 மணிக்கு வெளியாகிறது

நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 18.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 6) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு முதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் சேர்த்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோருக்கு இலவச கவுன்சலிங் வழங்க 71 நிபுணர்கள் கொண்ட சிறப்பு உதவிக்குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது. 1800-118-004 என்ற இலவச தொலைபேசி எண் அல்லது counselling.cecbse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக இந்த உதவிக் குழுவை தொடர்பு கொள்ளலாம்.

தேர்வில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கான உளவியல் ஆலோசனைகள், மேல்நிலைக் கல்வி குறித்த தகவல்கள் என அனைத்துவிதமான ஆலோசனைகளும் இதன் மூலம் வழங்கப்படும்.

வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டில் ஒரு மாதம் முன்னதாகவே பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x