Published : 03 May 2019 07:42 AM
Last Updated : 03 May 2019 07:42 AM

கோடீஸ்வர வேட்பாளர் பட்டியல் சத்ருகன் சின்ஹா மனைவி முதலிடம்

ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மனைவி பூனம் சின்ஹா கோடீஸ்வர வேட்பாளராக விளங்குகிறார்.

நாட்டின் 17-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 29-ம் தேதியுடன் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், வரும் 6-ம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த ஐந்தாம் கட்ட தேர்தலில், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், பிஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடுபவர்களில் பூனம் சின்ஹா கோடீஸ்வர வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவியான இவர், சமாஜ்வாதி கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.193.54 கோடியாகும்.

இவருக்கு அடுத்த இடத்தில், லோஹியா சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் வினய்குமார் மிஸ்ரா உள்ளார். உத்தரபிரதேசத்தின் சீதாபூர் தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் பாஜகவின் ஜெயந்த் சின்ஹா இருக்கிறார். ஜார்க்கண்டின் ஹஜாரிபாக் தொகுதியில் போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு ரூ.77.07 கோடி. இவர், பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பூனம் சின்ஹா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x