Published : 13 Apr 2019 04:16 PM
Last Updated : 13 Apr 2019 04:16 PM

35-வது சியாச்சின் தினம்: உறைபனி மலையை மீட்க உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

35-வது சியாச்சின் தினத்தை முன்னிட்டு சியாச்சின் சண்டையில் உயிரிழந்த வீரர்களின் தைரியத்தைக் கொண்டாடும் வகையில் இன்று அவர்களுக்கு பக்தியோடு பாரம்பரிய மரியாதை செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் சியாச்சின் தினம் வருகிறது. உலகிலேயே குளிர்ச்சியான, உயரமான பனிபடர்ந்த மலைச்சிகரமான சியாச்சின் பகுதியை மீட்டுத் தர தாய்நாட்டுக்காகப் போராடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியப் போர் வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அத்தியாக வீரர்களின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக தேசம் அவர்களை இன்று நினைவுகூர்கிறது.

சியாச்சினில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், இந்தியப் படைப்பிரிவின் வலிமையை வெளிப்படுத்திய ராணுவ வீரர்களின் தைரியத்தைப் போற்றும் வகையில் ராணுவ அதிகாரி பிரிகேடியர் பூபஷ் ஹதா போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு மிகுந்த பக்தியுடன் ராணுவப் பாரம்பரிய முறையில் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுக்குமான முரண்பாடுகளைக் களையவும் தீர்வு காணவும் நமது வீரர்கள் விடாமுயற்சியுடன் உறைபனி போர்க்களத்தில் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த ஒரு நாளுக்காகத்தான் அவர்கள் தொடர்ந்து போராடினர். இதன்மூலம் பிலாபோண்டு லா (பால்டி மொழியில் பட்டாம்பூச்சிகளின் கணவாய்) பகுதியையும் சால்ரோடா எல்லைக்கோட்டையும் மீட்டெடுத்தனர்.

1984-ம் ஆண்டில் நடந்த இச்சண்டை 'ஆபரேஷன் மேகதூத்' என்று அழைக்கப்படுகிறது. இந் நடவடிக்கையில் எதிரிகளை தோற்கடித்து சியாச்சின் பனிமலையின் கிட்டத்தட்ட 70 சதுர கி.மீ. பரப்பளவைத் தக்கவைத்தது இந்திய ராணுவம்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கிலிருந்து வடகிழக்கே ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இமயமலையில் காரகோரம் மலைத்தொடரில் சியாச்சின் பனி மலை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x