Published : 10 Apr 2019 03:51 PM
Last Updated : 10 Apr 2019 03:51 PM

உ.பி.யில் விலங்குகளை கொடுமைப்படுத்தியதாக ஐந்து பேருக்கு மூன்றாண்டுகள் சிறை

உத்தரப் பிரதேசத்தில் விலங்குகளை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாக்பத் நகரில் 2016  ஜூலை 13-ம் தேதி அன்று சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற லாரியில் கால்நடைகள் கடத்திச் சென்ற வழக்கின் இறுதி விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

பாக்பத் நகரின் பாதல் பகுதியில் 16 பிராணிகளும், இறந்த நிலையில் ஒரு எருமை மாடும் கடத்திச் சென்ற கபில், அலிஜான், அஷ்ரஃப், யூசூப் மற்றும் டெஹ்சீன் ஆகியோருக்கு ரூ.10,500 அபராதமும் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக விரைவு நீதிமன்ற நீதிபதி அபித் ஷாமிம் தனது தீர்ப்பில் கூறினார்.

1960 விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் நீதிபதி அபித் தீர்ப்பின்போது தெரிவித்தார்.

பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது உ.பி. மற்றும் ம.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், 2016-ல் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நெருங்கும் நிலையில் மக்களவைத் தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x