Last Updated : 24 Apr, 2019 05:15 PM

 

Published : 24 Apr 2019 05:15 PM
Last Updated : 24 Apr 2019 05:15 PM

என்னைப் பற்றி வரலாற்று திரைப்படமா?- இது என்ன அபத்தம்: மம்தா ஆவேசம்

மம்தா பானர்ஜியைப் பற்றி வெளியாகவுள்ள வரலாற்று திரைப்படத்துக்கு தேர்தல் முடியும் வரை தடை கோரி பாஜக தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ள நிலையில் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர் தனது ட்விட்டர் வாயிலாகக் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னைப் பற்றி வரலாற்றுத் திரைப்படம் ஏதும் தயாரிக்கப்படவில்லை என்பதும் மீறி அவதூறு பரப்பினால் வழக்கு தொடரப்படும் என்பதுமே அவரது எச்சரிக்கையாக இருக்கிறது.

இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், "என்னைப் பற்றி வரலாற்றுத் திரைப்படம் தயாராவதாக தகவல் பரவுகிறது. இது என்ன அபத்தம். எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ சில இளைஞர்கள் இணைந்து சில கதைகளைக் கோர்த்து ஒரு படத்தை உருவாக்கியிருக்கலாம். அது அவர்களது வேலை. நான் எந்த விதத்தில் அதில் தொடர்புடையவளாவேன். நான் ஒன்றும் நரேந்திர மோடி அல்லவே. இது மாதிரியான பொய்களைப் பரப்பினால் நான் அவதூறு வழக்கு தொடர வேண்டியிருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 17-ம் தேதி பாஜக தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் மம்தா பானர்ஜி தொடர்பான வரலாற்றுத் திரைப்படத்தை தேர்தல் முடியும்வரை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இதனையொட்டியே மம்தா தனது ட்விட்டர் வாயிலாக விளக்கமளித்திருக்கிறார்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் பி.எம்.நரேந்திரமோடி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியீட்டு சிக்கலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x