Last Updated : 04 Apr, 2019 05:37 PM

 

Published : 04 Apr 2019 05:37 PM
Last Updated : 04 Apr 2019 05:37 PM

தெலுங்கு தேசம், காங். தலைவர்களுக்காகக் கொண்டு செல்லப்பட்டதாக ரூ.2.48 கோடி தொகை: காவல்துறை பறிமுதல்

2 நபர்களிடமிருந்து ஹைதராபாதில் ரூ.2. கோடி கைப்பற்றப்பட்டது, அவர்களிடம் பறக்கும்படையினர் விசாரித்த போது, இந்தத் தொகை ராஜமுந்திரி லோக்சபா தொகுதி தெலுங்கு தேசத் தலைவர்களுக்காகக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தார், ராஜமுந்திரியில் ஏப்ரல் 11ம் தேதி சட்டப்பேரவை வாக்குப்பதிவு, லோக்சபா வாக்குப் பதிவு இரண்டும் நடைபெறுகிறது.

 

இன்னொரு காரில் ரூ.48 லட்சம் கொண்டு செல்லப்பட்ட போது பிடிபட்டது, மாட்டிய நபர் நல்கொண்டா மாவட்ட காங்கிரஸ் தலைவரிடம் அளிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

 

ஜெயாபேரி ப்ராப்பர்டீஸ் என்ற நிறுவனத்தின் அலுவலக ஊழியர்களான ஸ்ரீஹரி,  ஏ.பண்டாரி ஆகிய இருவரும் இரண்டு பைகளில் முழுதும் ரூ.500, ரூ.2000 நோட்டுகளுடன் காரில் சென்றபோது போலீஸார் மடக்கினர், அவர்கள்தான் தெலுங்கு தேச ராஜமுந்திரி தலைவருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது என்றார்கள். அதாவது இவர்கள் ரயிலில் இந்தப் பணத்தை ராஜமுந்திரி எடுத்து வருவதற்கு முன்பாக பிடிபட்டனர்.

 

அதாவது ராஜமுந்திரி எம்.பி எம்.முரளியின் தொண்டர் ஒய். முரளி கிருஷ்ணா என்பவர் ராஜமுந்திரி ரயில் நிலையத்துக்கு வருவார் என்றும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ப்ராப்பர்ட்டீஸ் முதலாளி கூறியதாக போலீஸாரிடம் அந்த ஆஃபீஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இன்னொரு சம்பவத்தில் ராச்சகொண்டா போலீஸ் சரகத்தைச் சேர்ந்த போலீஸ் அணியினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அப்துல்லாபுர்மேட் பகுதியில் கார் ஒன்று நிற்காமல் வேகமாகச் செல்ல போலீஸார் விரட்டிப்பிடித்தனர்.  ஆனால் காரிலிருந்து இறங்கியவர் போலீஸாரைத் தாக்கியுள்ளார். பிறகு இவரை பிடித்து ‘கவனித்து’ விசாரித்த போது கார் சீட்டுக்கு அடியில் ரூ.48 லட்சம்  ஒளித்து வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். பிறகு நல்கொண்டா காங்கிரஸ் தலைவருக்கு கொண்டு செல்வதற்கான பணம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x