Published : 12 Apr 2019 01:24 PM
Last Updated : 12 Apr 2019 01:24 PM

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவோர் விவரத்தை  வாக்காளர்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை: மத்திய அரசு வாதம்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி, நன்கொடை எங்கிருந்து வருகிறது என்பதை வாக்காளர்கள் அறிய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், " தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை. தேர்தல் நிதிப்பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை  தடை செய்யவேண்டும். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்’’ என்று அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிக சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகினார், தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதியும், மத்திய அரசு சார்பில் கே.கே. வேணுகோபாலும் ஆஜராகினார்கள்.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிடுகையில், "அரசியல் கட்சிகளுக்கு நிதிப த்திரங்கள் மூலம் நிதி அளிப்போர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு இருக்கிறது. வாக்களிக்கும் உரிமை வாக்களர்களுக்கு இருக்கும் போது, அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி குறித்து அறியவும் உரிமை இருக்கிறது.

வேட்பாளர்களை அறிந்து கொள்ளுதல் என்பது வெளிப்படை தேர்தல் முறையில் பாதி அளவுதான், மற்றவை, அரசியல் கட்சிகளுக்கு நிதிவரும் மூலத்தையும் அறிவதிலும் உரிமை இருக்கிறது. ஆதலால், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் கே.கே. வேணுகோபால் வாதிடுகையில், "வெளிப்படைத்தன்மையை கொண்டுவருகிறோம் என்கிற வகையில், நீதிமன்றம் தேர்தல் நிதிப்பத்திரங்களை கொலை செய்ய முடியாது. கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் சோதனை முயற்சியாக தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

வாக்காளர்களுக்கு அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. எதை அறிந்து கொள்ளும உரிமை இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வெளிப்படைத்தன்மையை மந்திரம் போல் செயல்படுத்த முடியாது. தேர்தலில் கறுப்புபணம் கடுமையாக பயன்படுத்தப்படுகிறது, அது ஜனநாயகத்துக்கு தீங்கானது. கறுப்புபணத்தை ஒவ்வொருநாளும் அதிகாரிகள் கண்டுபிடித்து வருகிறார்கள் என்பதை அறிவீர்கள் " எனத் வாதிட்டார்.

வாக்களர்கள், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியை அறிந்து கொள்ள வேண்டும், அதன் மூலங்கள், எங்கிருந்து பணம் வருகிறது, யார் நிதி அளிக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால், மத்திய அரசோ வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவோரின் விவரங்களை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x