Last Updated : 09 Apr, 2019 12:12 PM

 

Published : 09 Apr 2019 12:12 PM
Last Updated : 09 Apr 2019 12:12 PM

மீண்டும் பிரதமராக மோடிக்கு ஆதரவு அதிகம்: ராகுல் காந்தியின் செல்வாக்கு சரிவு: சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்

பிரதமர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான நேரடி போட்டியில், மீண்டும் மோடி பிரதமராக வர  ஏராளமான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று ஐஏஎன்எஸ், சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது, மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி சார்பில் 2-வது முறையாக பிரதமர் மோடி முன்நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய  முற்போக்கு கூட்டமி சார்பில் இன்னும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம், சிவோட்டர்ஸ் நிறுவனம் இணைந்து கடந்த ஜனவரி முதல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தின. அதன் முடிவுகளை படிப்படியாக அந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இதில் பிரதமராக யாருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு இடையிலான நேரடிப் போட்டியில் மோடியே முன்னணியில் இருந்து வருகிறார்.

அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 " பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி அல்லது நரேந்திர மோடி இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று மக்களிடம் கேள்வியை முன்வைத்தோம். இதில் 2019, ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி ராகுல் காந்திக்கு 38 சதவீத மக்கள் ஆதரவு அளித்திருந்தனர், ஆனால், இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் 34.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

அதேசமயம், பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக வருவதற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 51சதவீத வாக்குகள் இருந்த நிலையில், கருத்துக்கணிப்பின் முடிவில் இது 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருவருக்கும் இடையிலான ஆதரவு 12 சதவீத இடைவெளியில் இருக்கிறது. இதில் பிரதமர் மோடி 2-வது முறையாக வருவதற்கான ஆதரவு 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதலுக்குப் பின் மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின் மோடியின் செல்வாக்கு 56.64 சதவீதம் அதிகரித்துள்ளது, அதேசமயம் ராகுலுக்கு 32.27 ச தவீதமாக இருந்தது.

 பாலகோட் தாக்குதலுக்கு மறுநாள் அதாவது பிப்ரவரி 27-ம் தேதி மோடிக்கு ஆதரவு 57.84 சதவீதமாகவும், ராகுல் காந்திக்கான ஆதரவு 31.08 சதவீதமாக குறைந்தது.  

 இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தபின் மோடிக்கான ஆதரவு 60 சதவீதமாக உயர்ந்தது ஜனவரி 1-ம் தேதிக்குப்பின் மோடிக்கான ஆதரவு 60 சதவீதம் உயர்ந்தது இதுதான் முதல் முறையாகும்.

அதேசமயம், ராகுல் காந்திக்கான ஆதரவு படிப்படியாக குறைந்து 29.52 சதவீதமானது. இதில் மிக உச்சகட்டமாக கடந்த மாதம் 6-ம் தேதி நிலவரப்படி, மோடிக்கு ஆதரவாக 54.65 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 26.05 சதவீதமாக குறைந்தது.

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி, பிரதமர் மோடி இடையிலான நேரடிப் போட்டியில் மோடியே முன்னிலையில் இருந்து வருகிறார். ராகுல் காந்திக்கும், மோடிக்கும் இடையிலான ஆதரவு சதவீத இடைவெளி மிக அதிகமாக இருந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்குப் பின்பும் ராகுல் காந்திக்கு ஆதரவு பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை. ஏப்ரல் 2-ம் தேதி ராகுல் காந்திக்கு 33.58 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி  34.322 சதவீதமாக மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், மோடிக்கான ஆதரவு 58 சதவீதமாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x