Last Updated : 06 Apr, 2019 07:13 PM

 

Published : 06 Apr 2019 07:13 PM
Last Updated : 06 Apr 2019 07:13 PM

ஏப்ரல் 11ல் வெளியாகும் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தேர்தலைக் குறிவைத்ததல்ல - தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் விளக்கம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ''பிஎம் நரேந்திர மோடி'' பாலிவுட் திரைப்படம் தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் 11 அன்று வெளியிடப்படுவதால் தேர்தலை குறிவைத்து வெளியிடப்படவில்லை என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் சில தினங்களுக்கு முன் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 11 அன்று வெளியாவதாக தயாரிப்புக்குழு நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது.

 

இத்திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் திரையிடப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் இத்திரைப்படத்தை வெளியிடுவதென தயாரிப்புக்குழு திட்டமிட்டுள்ளது.

 

தடைகளைத் தாண்டி

படக்குழுவினர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த ஏப்ரல் 5-ம் தேதி திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டதில் ஆரம்பத்தில் தோல்வி ஏற்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு படம் வெளியாவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளால் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணையில் ஏப்ரல், 5, 8, 12 ஆகிய தேதிகளைக் கடந்து இறுதியாக ஏப்ரல் 11 அன்று வெளியிடலாம் என படத்திற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பல்வேறு தடைகளைக் கடந்து இத் திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விவேக் ஓபராய் பிரதமர் மோடியாக நடித்துள்ள இப் பாலிவுட் திரைப்படத்தை ஒமங் குமார் இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் விளக்கம்

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் தெரிவிக்கையில், ''மிகமிக சுவாரஸ்யமான பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகப் பார்வையாளர்களிடத்திலும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இத்திரைப்படத்தை நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் குறைந்த பட்சம் 38 நாடுகளில் வெளியிட உள்ளோம். இத்திரைப்படம் வெளிநாடுகளில் 600 திரையரங்குகள் உள்ளிட்டு உலகம் முழுவதும் மொத்தம் 1700 திரையரங்குகளில் வெளியாகிறது.

பொழுதுபோக்கு படம்

இப்போது படம் என்ன என்பதில் சந்தேகம் இல்லை. இது ஒரு சினிமா தயாரிப்பு. இப் படத்தைப் பற்றி கேள்வி எழுப்பியவர்கள், அதைத் தடுக்க தடை விதித்தவர்கள், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தைத் தகர்த்தெறிய முயற்சிக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இத்திரைப்படம் தேர்தலை குறிவைத்து வெளியிடப்படவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.

 மற்ற திரைப்படங்களை தடை செய்யக் கோரியபோது விமர்சனம் செய்த இந்த போலி அறிவுஜீவிகள் இப்போது மட்டும் ஏன் பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்கிறார்கள்.

இத்திரைப்படம் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு பொழுது போக்குத் திரைப்படம் அவ்வளவுதான். இத்திரைப்படம் குறித்து எதைஎதையோ சொன்னவர்கள் இன்னும் இந்தப் படத்தை பார்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பார்ப்பதும் அப்படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

பிரதமரையோ அல்லது கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகளையோ திருப்திப்படுத்த இந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஒரு சூடான அரசியலுக்குள் அவரது அரசியல் பயணம் எப்படி வந்து சேர்கிறது என்பதைத்தான் நாங்கள் தந்திருக்கிறோம்.

இவ்வாறு தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x