Published : 19 Apr 2019 05:10 PM
Last Updated : 19 Apr 2019 05:10 PM

நான் கொடுத்த சாபம்தான் அவர் மரணத்துக்குக் காரணம்: 26/11 தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஹேமந்த் கர்காரே குறித்து சாத்வி பிராக்யா

மலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் 2008-ல் சிறைக்குச் சென்ற சாமியார் சாத்வி பிராக்யா, 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்த தியாகி போலீஸ் அதிகாரி ஹெமந்த் கர்காரேவின் மரணத்துக்கு தன் சாபமே காரணம் என்று கூறியுள்ளார்.

 

குண்டுவெடிப்பு வழக்கில் உள்ளே சென்ற ஒருவருக்கு பாஜக போபால் லோக்சபா தேர்தல் சீட் அளித்தது.

 

பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படையின் அதிகாரி ஹேமந்த் கர்காரே 2011ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது எதிரிகளுடன் சண்டையிட்டு அதில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகம் இந்தியாவே போற்றிப் பாதுகாக்கும் ஒன்று, கர்காரே மீது மக்கள் தரப்பில் கடும் அபிமானம் இருந்து வருகிறது.

 

இந்நிலையில் 2008 மலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்த போது கர்காரே தன்னை படுமோசமாக, கடுமையாக நடத்தினார் என்றும் அப்போது சாபம் கொடுத்ததாகவும் சாத்வி பிராக்யா தெரிவித்துள்ளார்.

 

“இந்த ஹேமந்த் கர்காரேதான் என்னை தவறாக குற்றவாளியாக்கினார். நான் அப்போதே அவரிடம் கூறினேன், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று. அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன், அதுதான் 26/11 தாக்குதலில் அவரது மரணத்திற்குக் காரணமாகும்” என்று கூறியுள்ளார்.

 

ஐபிஎஸ் அதிகாரிகள் அமைப்பு கடும் கண்டனம்:

 

சாத்வி பிராக்யாவின் இந்த கூற்றை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு தங்கள் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்த போது, “அசோக சக்கர விருது வென்ற, வீர மரணம் எய்திய ஸ்ரீ ஹேமந்த் கர்காரே பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு தியாகியுள்ளார். ஆகவே சீருடை அணிந்த நாங்கள் அனைவரும் மிகவும் புண்பட்டுள்ளோம், வேட்பாளர் தன் கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், எங்களுடைய தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x