Published : 21 Mar 2019 08:47 PM
Last Updated : 21 Mar 2019 08:47 PM

2019 மக்களவைத் தேர்தல்: காந்திநகரில் அத்வானிக்குப் பதிலாக அமித் ஷா; ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி : பாஜக முதல் பட்டியல் வெளியீடு

2019 மக்களவைத் தேர்தல்களுக்கான 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது.  காந்திநகரில் பலமுறை போட்டியிட்ட மூத்த தலைவர் அத்வானிக்குப் பதிலாக இம்முறை அமித் ஷா நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே போல் வாரணாசியில் பிரதமர் மோடியும், ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும்,  நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும் ஸ்மிருதி இரானி அமேதியிலும், காஜியாபாத்தில் ஜெனரல் வி.கே.சிங்கும் சமீபமாக நுழைந்துள்ள சுஜய் விகே பாட்டீல் அகமெட்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

 

 

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா நொய்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

முன்னாள் மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரத்திலும் , கே.ஜே.அல்போன்ஸ் எர்ணாக்குளம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

 

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய ஏ.மஞ்சு ஹாசன் தொகுதியிலும் பிரதாப் சின்ஹா மைசூரிலும் சவுகிதார் சதானந்த கவுடா பெங்களூரு வடக்குத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். (எச்.டி.தேவேகவுடாவுக்கு எதிராக போட்டியிட வாய்ப்பு).

 

ஜெய்பாண்டா கென்ரபரா தொகுதியிலும் புவனேஷ்வரில் அபராஜிதா சாரங்கியும் போட்டியிடுகின்றனர்.

 

மத்திய அமைச்சர்கள் கிரன் ரிஜிஜு அருணாச்சலப்பிரதேசம் கிழக்குத் தொகுதியிலும் ஜிதேந்திர சிங் உதாம்பூர் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.

 

அர்ஜுன் ராம் மேக்வால் பிகானெர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜ்யவர்தன் ராத்தோர் ஜெய்பூரிலிருந்து போட்டியிடுகிறார்.

 

மதுராவில் ஹேமமாலினி,  உன்னாவ் தொகுதியில் சாக்‌ஷி மகராஜ்,  மஹாராஷ்டிரா மாநிலம் பீட் தொகுதியில் பிரீத்தம் கோபிநாத் முண்டே ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

 

கர்நாடகாவில் குல்பர்கா தனித் தொகுதியில் உமேஷ் ஜாதவ் போட்டியிடுகிறார்கள்.  முதல் போட்டியில் 2 இஸ்லாமியர்களுக்கும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, ஸ்ரீநகரில் காலித் ஜஹாங்கிர், அனந்த்நாக் தொகுதியில் சோஃபி யூசப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

20 மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 2 இடங்கள் நிலுவையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x