Last Updated : 04 Mar, 2019 12:11 PM

 

Published : 04 Mar 2019 12:11 PM
Last Updated : 04 Mar 2019 12:11 PM

பனிமழையில் வெடவெடத்து உயிரிழந்த 1000த்திற்கும் அதிகமான பறவைகள்: ம.பி.யில் பரிதாபம்

மத்திய பிரதேசத்தில் உள்ள பெஞ்ச் புலிகள் காப்புக் காட்டில் நேற்று முன்தினம் இரவு 1,102 பறவைகள் பனியில் உறைந்து உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெஞ்ச் புலிகள் காப்பக வனத்துறை இயக்குநர் விக்ரம் சிங் பரிஹார் தெரிவித்ததாவது:

மத்தியப் பிரதேசத்தில் சின்ந்த்வாரா மாவட்டத்தில் பனிமழை பொழிந்தது. குறிப்பாக கமார்பானி மற்றும் கன்ஹார் கிராமத்தில்  கடுமையாக இருந்தது. இப்பகுதி சியோனி நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.

சனிக்கிழமை இரவு பொழிந்த இப்பனிமழையில் சிக்கி 590 நாரைகள், 360 பச்சைக்கிளிகள், 152 காகங்கள் உயிரிழந்தன. ஞாயிறு காலையில் அப்பகுதியில் சென்று பார்த்தபோது இவை அனைத்தும் பனியில் வெடவெடத்து இறந்துபோயிருந்ததைக் காணமுடிந்தது.

வனஉயிர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அப்பறவைகளை சோதனையிட்டோம். பின்னரே அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

இவ்வாறு வனத்துறை இயக்குநர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x